மீண்டும் வெண்பா கைது செய்யப்படுவது போல பாரதிகண்ணம்மா சீரியல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bharathi Kannamma Venba Arrest Promo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதியை எப்படியாவது திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருந்து வந்த நிலையில் அவருடைய திட்டங்களுக்கு வைக்கும் வகையில் அம்மாவாக ரேகா என்ட்ரி கொடுத்துள்ளார்.

ரேகா வெண்பாவை அடக்கி வைத்து வரும் நிலையில் தற்போது அவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தது ரத்து செய்யப்பட்டு விட்டதாக சொல்லி கைது செய்து போலீஸ் ஸ்டேஷனில் அமர வைத்துள்ளனர். இந்த நேரத்தில் அங்கு வந்த தனது அம்மாவிடம் எப்படியாவது தன்னை வெளியே எடுக்குமாறு கெஞ்சுகிறார் வெண்பா.

உன்னை நான் வெளியே எடுக்கிறேன், ஆனால் நீ நான் சொல்ற ஆளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என செக் வைக்கிறார். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.