கண்ணம்மா மகள் தான் லட்சுமி என்ற உண்மை பாரதிக்கு தெரிய வந்துள்ளது.

Bharathi Kannamma Update 13.08.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வயிற்று வலியால் துடித்துக் கண்டிருந்த அஞ்சலியை பாரதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்‌.

தல-தளபதி இன்று புதிய கூட்டணி? : குஷியாய் ரசிகர்கள் வைரல் பதிவு..

இதற்கிடையே அஞ்சலிக்கு திடீரென மார்பு வலி ஏற்பட்டு தவிக்கிறார். உடனே பதறிப்போன அகில் மற்றும் குடும்பத்தினர் பாரதிக்கு போன் செய்கின்றனர். ஆனால் பாரதி லஷ்மி மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லும் அவசரத்தில் காலை எடுக்கவில்லை. அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக வெண்பா பாரதி வீட்டிற்கு செல்ல அவர் அஞ்சலியை பரிசோதனை செய்கிறார். அஞ்சலியின் மெடிக்கல் ரிப்போர்ட் கேட்கிறார். தயக்கத்துடன் அஞ்சலியும் ரிப்போர்ட் கொடுக்க அஞ்சலிக்கு இருக்கும் பிரச்சனை வெண்பாவுக்கு தெரியவருகிறது.

கண்ணம்மா மகள் தான் லட்சுமி.. உண்மை அறிந்து அதிர்ச்சியான பாரதி, வெண்பாவிடம் சிக்கிய அஞ்சலி - பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட் அப்டேட்.!!

தயவுசெய்து இதை யாரிடமும் சொல்லிவிட வேண்டாம் என அஞ்சலி என்பதுடன் அழுவ வெண்பாவும் அஞ்சலியை பழிவாங்க இந்த உண்மையை வீட்டில் உள்ள அனைவரிடமும் மறைந்துவிடுகிறார். இன்னொரு பக்கம் லட்சுமிக்கு ஃபுட் பாய்சனாகி இருப்பதாக மருத்துவர் கூறி அவருக்கு சிகிச்சை அளிக்கிறார்.

எனக்கு 274 Degree Celsius-ல “வயிறு எரியுது”…, கடுப்பான Vignesh Shivan..!

லஷ்மியின் பெற்றோர் யார் என தெரிந்து கொண்டு அவர்களுக்கு விஷயத்தை தெரியபடுத்த பாரதி லஷ்மியின் பள்ளி டைரியை எடுத்து பார்க்க அதில் பெற்றோர் பெயர் இடத்தில் கண்ணம்மா பெயரும் அவருடைய புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. இதனைக் கண்டு பாரதி லக்ஷ்மி கண்ணம்மாவின் மகள் தான் தெரிந்து கொண்டு அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.

கண்ணம்மாவின் மகள் தான் லட்சுமி என்பதை தெரிந்து கொண்ட பாரதி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை நாளை பார்க்கலாம்.