பாரதியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்துள்ளார் கண்ணம்மா.

Bharathi Kannamma Upcoming Episodes Promo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மாவை ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்ட பாரதி தற்போது வெண்பாவின் சூழ்ச்சியால் கண்ணம்மாவுக்கு பிறந்த குழந்தை என்னுடைய குழந்தை இல்லை என அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

எட்டு வருடமாக பிரிந்து வாழ்ந்து வரும் இவர்கள் எப்போது ஒன்று சேர்வார்கள் என்பார் செய்யும் சூழ்ச்சி எப்போது பாரதிக்கு தெரிய வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த ப்ரோமோ வீடியோவில் பாரதி கார் ரிப்பேராகி வழியில் நிற்க அவர் காருக்கு என்ன ஆனது என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் காரில் இருந்து போனை எடுத்துக் கொண்டு ஓட இதனைப் பார்த்த கண்ணம்மா அவரை துரத்திப் பிடிக்கிறார். பிறகு கண்ணம்மாவை அந்த மர்ம நபரை அடிக்க பாய பாரதி ஓடுகிறார்.

ஒரு கட்டத்தில் அந்த மர்மநபர் கத்தியால் பாரதியைக் குத்த வர குறுக்கே புகுந்து கண்ணம்மா கையில் கொடுத்து வாங்கிக் கொள்கிறார். இதனால் அவருக்கு பெரிய கையில் நரம்பு கட்டாகி ரத்தம் கொட்டி மயக்கம் போட்டு விழுகிறார். கண்ணம்மாவை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறார் பாரதி. இதனைப் பார்த்த வெண்பா அதிர்ச்சி அடைகிறார்.

ஏற்கனவே பாரதிக்கு இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கும் ஹேமா தற்போது தன்னுடைய டாடியின் உயிரை காப்பாற்றிய சமையல் அம்மாவை திருமணம் செய்து வைக்கலாம் என்று தோன்றுவதற்காகவே இந்த காட்சி வடிவமைக்கப்பட்டு இருப்பது போல தெரிகிறது. அடுத்தடுத்த எபிசோடுகளில் இதன் நோக்கம் என்ன என்பது தெரிந்துவிடும்.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.