கண்ணம்மா காலில் விழுந்து கதறி அழுதுள்ளார் சௌந்தர்யா.

Bharathi Kannamma Serial Episode Update 14.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஹேமா தன்னுடைய மகள் என தெரிந்ததும் சௌந்தர்யா வீட்டுக்கு சென்ற கண்ணம்மா ஹேமா இல்லாமல் போக மாட்டேன் என அடம் பிடிக்கிறார். அனைவரும் கொஞ்சம் அவகாசம் கேட்டும் அதனை தர மறுக்கிறார் கண்ணம்மா.. கடைசியாக சௌந்தர்யா கண்ணம்மா காலில் விழுந்து கெஞ்சுகிறார்‌. இதனால் 4 நாளுக்கு மேல் ஒரு மணி நேரம் கூட அனுமதி தர மாட்டேன் என கூறி விட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

காலில் விழுந்து கதறிய சௌந்தர்யா.. வெண்பாவை வெறுப்பேற்றிய கண்ணம்மா - பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் அப்டேட்.!!

நேராக வெண்பா தனக்காக காத்திருக்கும் இடத்திற்கு சென்ற கண்ணம்மா அவரை என்னுடைய குழந்தையை கண்ணில் காண்பித்தால் போதும் என கெஞ்சுகிறார். அழுவது போலவும் வெண்பாவை திட்டுவது போலவும் மாற்றி மாற்றி பேசி வெறுப்பேற்றுகிறார். ஒரு கட்டத்தில் வெண்பா உன்னை அப்புறம் பார்த்துக்கறேன் என அந்த இடத்தை விட்டு கிளம்பி விடுகிறார்.

காரில் ஹேமா வீட்டுக்கு சீக்கிரம் போங்க சமையல் அம்மா எனக்காக காத்துட்டு இருப்பாங்க என கூறுகிறார். நானும் அந்த சமையல் அம்மா எதுக்கு வந்திருக்காங்கனு தெரிஞ்சிக்க தான் வேகமாக போயிட்டு இருக்கேன் என மனதில் நினைத்துக் கொள்கிறார்.

இந்த பக்கம் சௌந்தர்யா கண்ணம்மா கொடுத்த கெடுவை நினைத்து நினைத்து கண்ணாடி டம்ளரை இறுக்கி பிடித்ததில் அது உடைந்து கையில் காயம் ஏற்படுகிறது.