சுபம் போட்ட கையோடு பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டாம் பாகம் தொடங்குகிறது.

Bharathi Kannamma Season 2 Promo Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இன்றையோடு மொத்தமாக முடிவுக்கு வர உள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடங்கும் என சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

அது மட்டுமல்லாமல் இந்த இரண்டாவது சீசனில் நாயகியாக வினுஷா தேவி நடிக்க நாயகனாக சிப்பு சூரியன் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அதற்கேற்றார் போல தற்போது புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் வினுஷா தேவி, சிப்பு சூர்யன் நடிப்பது உறுதியாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் இந்த செய்திகள் தினம் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கதைகளம் புதிய கதாபாத்திரங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது.