பிரபல சீரியலை அப்பட்டமாக காப்பியடித்துள்ளது விஜய் டிவி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதியின் கண்ணம்மாவும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் பாரதி டி என் ஏ டெஸ்ட் எடுக்காமல் கண்ணம்மாவுக்கு பிறந்த குழந்தைக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்லி கதையை ஓட்டி வந்த நிலையில் கடந்த வாரம் பாரதிக்கு உண்மைகள் தெரிய வந்தது.

இதை அடுத்து பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர்வார்கள், சீரியலுக்கு சுபம் போடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் கடைசியில் கண்ணம்மா பாரதி ஏற்க மறுத்தார். இப்படியான நிலையில் அடித்து வெளியான ப்ரோமோ வீடியோ ஒன்றில் ஹேமாவும் லட்சுமியும் உன்னை தப்பா பேசினவர்கள் யாரும் நமக்கு வேண்டாம் நாம எங்கேயாவது போயிடலாம் என சொல்ல மூவரும் ஊரை விட்டு கிளம்புகின்றனர்.

இந்த பக்கம் கண்ணம்மாவை தேடி வீட்டுக்கு வரும் பாரதி வீட்டில் யாரும் இல்லாததை பார்த்து கண்ணம்மாவை நான் எங்கே போய் தேடுவேன் என புலம்புகிறார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தெய்வம் தந்த பூவே சீரியலை போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

முதலில் தெய்வம் தந்த பூவே சீரியல் பாரதி கண்ணம்மா சீரியல் ட்ராக்கில் செல்வது போல இருந்த நிலையில் அடுத்து அந்த சீரியல் நாயகி மித்ரா தனது குழந்தைக்கு வினய் தான் அப்பா என்பதை நிரூபித்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி கண் காணாத இடத்துக்கு சென்றார். அதே போல் தற்போது கண்ணம்மா பாரதியை வேண்டாம் என தூக்கி போட்டு கண் காணாத இடத்துக்கு போவது போல கதைக்களம் நகர இருப்பதாக தெரியவந்துள்ளதால் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.