லட்சுமியிடம் நீங்க தான் அப்பா என உண்மையை சொல்லட்டுமா என பாரதியை மிரட்டுகிறார் கண்ணம்மா.

Bharathi Kannamma Episode Update 30.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மா லட்சுமி பார்க்க பள்ளிக்கு செல்ல வீட்டில் பாரதி என்ன மட்டும் தனியா விட்டுட்டு எங்கே போனார் என புலம்பிக் கொண்டே இருக்கிறார். இந்த நேரத்தில் கண்ணம்மா வர எங்கடி போன இவ்வளவு நேரம் என பாரதி கேட்கிறார். கண்ணமா பதில் சொல்லாமல் அமைதியாக கிச்சனுக்கு செல்ல உன் கிட்ட தான் கேட்கிறேன் என கூறுகிறார். ஸ்கூலுக்குப் போயிருந்தேன் என்ன கூறுகிறார். உன் பொண்ணை கூட்டிட்டு வரவா என்று கேட்க கூட்டிட்டு வர்ற இல்ல அனுப்பிட்டு வரேன் என சொல்கிறார்.

மத்திய அரசு பயப்படுகிறது : ராகுல்  விமர்சனம்

கண்ணம்மா வீட்டில் புலம்பும் பாரதி.. லட்சுமியிடம் உண்மைய சொல்லவா என மிரட்டும் கண்ணம்மா - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

ஸ்கூல்ல உங்க அம்மாவை பார்த்தேன். நீங்க இங்க இருக்கிற வரைக்கும் லட்சுமியாக இருக்கட்டும்னு கூட்டிட்டு போயிட்டாங்க என கூறுகிறார். யாரை கேட்டு இந்த முடிவை தான் எடுக்கிறீர்கள் என பாரதி கூற லட்சுமி இங்கு வந்து டாக்டர் அங்கிள் ஏன் இங்க இருக்காருன்னு கேப்பா இவர்தான் துபாயில் இருக்காருன்னு சொல்லிட்டு இருந்த உங்க அப்பா என சொல்லட்டுமா? சொல்லுங்க உங்களுக்கு ஓகேன்னா இப்பவே லஷ்மி வர வைக்கிறேன் என கூறுகிறார். பாரதி கடுப்பாகி உள்ளே எழுந்து சென்று விடுகிறார்.

இந்த பக்கம் லஷ்மியும் ஹேமாவும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். லஷ்மி ரொம்ப போரடிக்குது நாம வெளியே போய் விளையாடலாமா எனக் கேட்க பாட்டி திட்டுவாங்க என என கூறுகிறார். பிறகு நாம மிமிக்ரி செய்யலாம் என ஹேமா சொல்ல லஷ்மி பாரதி போலவும் ஹேமா கண்ணம்மா போலவும் மிமிக்ரி செய்கிறார். பிறகு சௌந்தர்யா வந்து பாரதியும் கண்ணம்மாவும் அங்கு ஒன்றாக இருக்கிறதும் இங்கே என் பேரப்பிள்ளைகள் மூணு பேரும் ஒன்றாக இருக்கிறது பார்க்க சந்தோஷமா இருக்கு என கூறுகிறார். அகில் இதுக்கெல்லாம் பாரதிக்கு தான் நன்றி சொல்லணும் என்ன சொல்கிறார். அது என்னவோ சரிதான் என சௌந்தர்யா கூறுகிறார்.

Ajith ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise – Dhruv Vikram அடுத்த படம் இவருடனா?

கண்ணம்மா வீட்டில் புலம்பும் பாரதி.. லட்சுமியிடம் உண்மைய சொல்லவா என மிரட்டும் கண்ணம்மா - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு லக்ஷ்மியும் ஹேமாவும் குட்டி பாப்பா உடன் விளையாடுகின்றனர். இது பக்கம் கண்ணம்மா நெய் பொடி தோசை போடுகிறார். வாசம் பிடித்த பாரதி பசியில் தவிக்கிறார். சாப்பிட்டீங்களா பசிக்குதா என பாரதி கேட்க அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை என கூறுகிறார். பசிக்குது தான் அதுக்கு என்ன பண்ண ஆனா இந்த வீட்டில சாப்பிட மாட்டேன் என கூறுகிறார். அதுக்கு நீ வெளியில போய் சாப்பிட்டு வர போறீங்களா என்ன கண்ணம்மா கேட்க நான் எதுக்கு வெளியே போகணும் எல்லாத்துக்கும் ஆப் இருக்கு. புருஷனுக்கு சோறு போட மாட்டேன்னு பொண்டாட்டி மிரட்டல் எல்லாம் அந்தக் காலம். இன்னும் கொஞ்சம் காலம் பாரு வீட்டுக்கு வந்து ஊட்டி விட்டு போகிறது கூட ஆப் வந்துவிடும் என கூறுகிறார்.

பிறகு பாரதி ஆன்லைனில் நெய் பொடி தோசை தேங்காய் சட்னி ஆர்டர் செய்கிறார். இந்த பக்கம் கண்ணம்மா தோசையை எடுத்து வந்து பாரதி பக்கத்தில் உட்கார்ந்து ரசித்து ருசித்து சாப்பிட்டு வெறுப்பேற்றுகிறார். பாரதி டெலிவரி பாய்க்கு போன் செய்து எங்கே இருக்கீங்க என கேட்கிறார். பக்கத்துல தான் இருக்கேன் எப்படி வரவேண்டும் என கேட்க மேப் பார்த்து வாங்க என கூறுகிறார். மேப் தவறான ரூட்டை காட்டுவதாக சொல்கிறார். யார்கிட்டயாவது கேட்டு கேட்டு சீக்கிரமா வாங்க என சொல்ல கண்ணம்மா போனை வாங்கி அட்ரஸை கூறுகிறார்.

புட்டும் வந்துவிடுகிறது. பாரதி ஆர்வத்தோடு அதைப் பிரித்து புதினா சட்னி தேங்காய் சட்னி என அனைத்தையும் சேர்த்து வாயில் வைத்தால் ஒரே புளிப்பு. ஆனால் அதை வெளியில் காட்டாமல் ஆஹா ஓஹோ என சொல்லிக்கொண்டு சாப்பிட முடியாமல் சாப்பிடுகிறார். சாப்பாடு நன்றாக இல்லை என்பதை முகத்தை வைத்தே கண்டுபிடிக்கிறார் கண்ணம்மா. பிறகு நைசாக ஒரு சின்ன பீஸ் எடுத்து சாப்பிட்டால் உப்பு இல்லை மாவு புளிச்சு போயிருக்கு நல்லாவே இல்லை என கூறுகிறார். அதெல்லாம் நல்லா தான் இருக்கு போ போ என பாரதி சொல்கிறார். பிறகு என் வாழ்க்கைல இப்படி ஒரு தோசையை சாப்பிட்டதே இல்லை கன்றாவியா இருக்கு என கூறிக்கொண்டே சாப்பிடுகிறார்.

இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.