அப்பாவை தேடி செல்கிறார் ஹேமா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி வேக வேகமாக வீட்டுக்கு வந்து துணிமணிகளை எடுத்துக்கொண்டு டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் குழந்தைகள் எனக்கு பிறந்தது என தெரிய வந்தால் கண்ணம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு சேர்ந்து வாழ வேண்டும். அப்படி டி என் இ டெஸ்டில் வேறு மாதிரியான ரிசல்ட் வந்தால் இங்கிருந்து செல்வதோடு சரி திரும்பி வரக்கூடாது என முடிவெடுத்து தன்னுடைய அப்பா அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு விஷயத்தை சொல்லாமல் கிளம்பி செல்கிறார்.

அப்பாவை தேடி செல்லும் ஹேமா.. வெண்பாவால் வந்த ஆபத்து, பாரதி எடுத்த முடிவு - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோடு அப்டேட்

இந்த பக்கம் ஹேமா லட்சுமி டிவி பார்த்துக் கொண்டே தூங்கியதும் தன்னுடைய அப்பாவை கண்டுபிடிக்க தாம்பரத்தில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு செல்ல முடிவெடுத்து செல்கிறார். இந்த வழியாக வெண்பா ரவுடிகளை பார்க்க வந்த போது அப்போது ஹேமாவை பார்த்து எங்கே போற என விசாரிக்க அப்பாவை தேடி செல்வதாக சொல்ல உனக்கு அப்பாவே கிடையாது. உன் அப்பா யாருன்னு உங்க அம்மாவுக்கு தெரியாது ஏன்னா உங்க அம்மா ரொம்ப ரொம்ப கெட்டவ என சொல்ல ஹேமா வெண்பாவை கல்லால் அடித்து விட்டு அங்கிருந்து தப்பி செல்கிறார்.

அப்பாவை தேடி செல்லும் ஹேமா.. வெண்பாவால் வந்த ஆபத்து, பாரதி எடுத்த முடிவு - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோடு அப்டேட்

இதனால் வெண்பா ரவுடிகளை அழைத்து அவர்களிடம் ஹேமாவின் புகைப்படத்தை கொடுத்து அவளை உடனடியாக தூக்கிட்டு வாங்க என ஆர்டர் போட ரௌடிகள் ஹேமாவை கடத்த கிளம்புகின்றனர். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.