வெண்பாவிற்கு ஷர்மிளா எதிர்பாராத அதிர்ச்சி கொடுக்க பாரதிக்கு ஹேமாவின் நடத்தையால் சந்தேகம் வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ரோஹித் தன்னுடைய ஏரியாவில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சோகப் பாட்டு பாடிக்கொண்டிருக்க அப்போது அங்கு ஷர்மிளா வருகிறார். ரோகித் சர்மிளா வந்திருப்பது தெரியாமல் தன்னுடைய நண்பர்களிடம் வெண்பாவை தனக்கு பிடித்திருந்தால் அவளை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பொய் சொன்னேன். என்னுடைய வார்த்தையில் தான் பொய் இருந்ததே தவிர காதலில் பொய்யில்லை என பேசிக்கொண்டு இருக்க அப்போது ஷர்மிளா அங்கு வர ரோஹித் ஷாக் ஆகிறார். நீங்கதான் என்னுடைய மாப்பிள்ளை என சொல்ல சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார்.

வெண்பாவுக்கு ஷர்மிளா கொடுத்த அதிர்ச்சி, ஹேமாவின் நடத்தையால் பாரதிக்கு வந்த சந்தேகம் - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

இந்த பக்கம் பாரதி ரூமில் டல்லாக இருக்கும் ஹேமாவிடம் சென்று என்னாச்சு ஏன் டல்லா இருக்க என கேட்க லட்சுமியோட சண்டை என்ன சொல்ல பாரதி இதை நான் நம்ப மாட்டேன் என கூறுகிறார். பிறகு ஹேமா நீங்க என்கிட்ட ஏதாவது பொய் சொல்லி இருக்கீங்களா என கேட்க பாரதி அம்மா பற்றி சொன்ன பொய் நினைத்து பார்த்து உன்கிட்ட நான் என்ன பொய் சொல்ல போறேன் அப்படி எதுவும் சொன்னதில்லை என கூறுகிறார். அடுத்து ஹேமா எழுந்து தாத்தா ரூமில் போய் தூங்க போறேன் என சொல்கிறார். பாரதி ஹேமாவிடம் எதுக்கு இப்படி ஒரு மாற்றம் என்ன ஆச்சு என குழம்புகிறார்.

அதன் பின்னர் வீட்டில் சாந்தி வெண்பா, ரோஹித்தின் கல்யாண பத்திரிக்கை எடுத்து வந்து இதை என்ன செய்வது என கேட்க வெண்பா குப்பைத் தொட்டியில் போட சொல்கிறார். அப்போது வரும் ஷர்மிளா அந்த பத்திரிகையை எடுத்த இடத்தில் வைக்க சொல்ல அதிர்ச்சியான வெண்பா நின்று போன கல்யாண பத்திரிக்கை எதுக்கு என கேட்க கல்யாணம் நின்னு போச்சுன்னு யார் சொன்னது என அதிர்ச்சி கொடுக்கிறார். சொன்ன தேதியில் சொன்ன இடத்தில் உனக்கும் ரோஹித்துக்கும் கல்யாணம் நடக்கும் என சொல்லி ஷாக் கொடுக்கிறார். அதன் பிறகு வீட்டுக்கு வரும் ரோஹித் வெண்பாவிடம் ரொமான்ஸ் செய்து வெறுப்பேத்துகிறார்.

வெண்பாவுக்கு ஷர்மிளா கொடுத்த அதிர்ச்சி, ஹேமாவின் நடத்தையால் பாரதிக்கு வந்த சந்தேகம் - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

இந்த பக்கம் கண்ணம்மா யோசனையில் இருக்க அப்போது வரும் லட்சுமி என்ன ஆச்சு என கேட்க ஹேமா தன்னிடம் அம்மா பற்றி பேசிய விஷயத்தை சொல்ல லட்சுமி நீ தான் அம்மான்னு சொல்லிட வேண்டியதுதானே இன்னும் எவ்வளவு நாளைக்கு அவகிட்ட உண்மையை மறைக்கப் போறீங்க என சொல்ல கண்ணம்மா உன் வேலையை போய் பாரு என திட்டி விடுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.