காதலியுடன் ஏற்காடு கொண்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பாரதி கண்ணம்மா அருண்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் அருண் பிரசாத். மேயாத மான் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகியிருந்தாலும் சின்னத்திரை வாய்ப்புதான் இவருக்கு தனி இடத்தை பெற்றுக் கொடுத்தது.
பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பிறகு தற்போது வரை எந்த ஒரு சீரியலிலும் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் தற்போதைய தன்னுடைய காதலியுடன் ஏற்காடு சென்றுள்ளார். ஜோடியாக போட்டிங் செல்வது போல முகத்தை மறைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதேபோல் பிக் பாஸ் அர்ச்சனாவும் ஏற்காட்டு ரெசார்ட்டில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தகவல் பரவி வரும் நிலையில் தற்போது இந்த புகைப்படங்களின் மூலம் தங்களது காதலை மறைமுகமாக உறுதி செய்துள்ளனர் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.