மொத்தமாக முடிவுக்கு வருகிறது பாரதி கண்ணம்மா 2 சீரியல்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலின் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது.

நாயகியாக வினுஷா தேவி தொடர்ந்து நடிக்க நாயகனாக ரோஜா சீரியல் புகழ் சிம்பு சூர்யன் நடித்து வருகிறார். ஆரம்பம் முதலே இந்த சீரியல் கதை மக்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. தொடர்ந்து நிறைய எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

ரேட்டிங்கும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத காரணத்தினால் 9 மணியில் 10 மணி என சீரியல் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டது. ஆனாலும் பெரிய முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் தற்போது மொத்தமாக முடிவுக்கு வர உள்ளது.

ஆமாம், வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் இரவு 10 மணிக்கு கிழக்கு வாசல் என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் இந்த சீரியல் ஆகஸ்ட் 5-ம் தேவியுடன் முடிவுக்கு வர இருப்பது உறுதியாகி உள்ளது.

இந்த தகவலால் சிப்பு சூர்யன் ரசிகர்கள் அப்செட்டாகி உள்ளனர்.