பிரபல சின்னத்திரை நடிகர் பரத் கல்யாண் மனைவி திடீர் மரணம் அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பரத் கல்யாண்.

பிரபல சின்னத்திரை நடிகர் பரத் கல்யாண் மனைவி திடீர் மரணம், ரசிகர்கள் அதிர்ச்சி - காரணம் என்ன??

இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலிலும் சிறப்பு வேடத்தில் இடம் பெற்றார்.

இவருக்கு ப்ரியதர்ஷினி என்ற மனைவி இருந்து வருகிறார். சமீப காலமாக இவரது மனைவி ப்ரியதர்ஷினி உடல்நல குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரிய வந்துள்ளது.

பிரபல சின்னத்திரை நடிகர் பரத் கல்யாண் மனைவி திடீர் மரணம், ரசிகர்கள் அதிர்ச்சி - காரணம் என்ன??

இணையத்தில் தீயாக பரவி வரும் இந்த தகவலால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் பரத் கல்யாணுக்கு ஆறுதல் கூறியும் வருகின்றனர்.