இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது பீஸ்ட் திரைப்படம்.

Beast Vs KGF 2 Collection Report : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பீஸ்ட் என்ற திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் உலகம் முழுவதும் வசூல் வேட்டை ஆடி வருகிறது. முதல் நாளில் 80 கோடி வசூலை தாண்டிய இத்திரைப்படம் இரண்டாவது நாளில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது.

சென்னையில் மட்டும் இரண்டாவது நாளில் ரூ 1.61 கோடி வசூல் செய்துள்ளது. இதே தினத்தில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் சென்னையில் அறுபத்தி ஏழு லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் இந்தப் படங்களின் வசூல் கிடுகிடுவென அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய வசூலைப் பொறுத்தவரை பீஸ்ட் திரைப்படத்தை காட்டிலும் கேஜிஎப் 2 அதிகமான வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்தியில் கேஜிஎப் 2 திரைப்படம் 54 கோடி வசூல் செய்ய பீஸ்ட் திரைப்படம் 54 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது.

கேரளாவில் கேஜிஎப் 2 திரைப்படம் ரூபாய் 7.1 கோடி வசூல் செய்ய பீஸ்ட் திரைப்படம் ரூபாய் 6.6 கோடி வசூல் செய்துள்ளது. அமெரிக்காவில் 14ஆம் தேதி கேஜிஎப் 2 திரைப்படம் 32,000 டாலர் வசூல் செய்ய பீஸ்ட் திரைப்படம் 55,000 டாலர் வசூல் செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.