தளபதி விஜய் பங்கேற்கவுள்ள சன் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார் என தெரிய வந்துள்ளது.

Beast Special Show Host Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பீஸ்ட்.

பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், கிங்ஸ்லி எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைபெறவில்லை என அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக தளபதி விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும் சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது.

தற்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது யார் என தெரியவந்துள்ளது. சன்டிவி குடும்பத்தை சேர்ந்த தொகுப்பாளர் யாராவது தொகுத்து வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியை இயக்குனர் நெல்சன் அவர்களே தொகுத்து வழங்க உள்ளார் என தெரியவந்துள்ளது.

நெல்சன் திலீப் குமார் பொதுவாகவே குசும்பு அதிகமென்பதால் அவர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் செம கலக்கலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.