விஜயின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு செய்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்புறமாக உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்த வரும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரை தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த பீஸ்ட் திரைப்படம் ஓராண்டு நிறைவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதாவது, நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம் பீஸ்ட். இதில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, யோகி பாபு, vtv கணேஷ், செல்வராகவன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

மேலும் அனிருத் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவு செய்திருப்பதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய போஸ்டருடன் தெரிவித்துள்ளது. அதனை ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.