அமெரிக்காவில் பீஸ்ட் திரைப்படம் வெற்றிபெற எவ்வளவு வசூல் செய்ய வேண்டும் என்ற தகவல் கசிந்துள்ளது.

Beast Collection Analysis in America : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பீஸ்ட்.

பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், கிங்ஸ்லி எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த படம் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதனால் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் பீஸ்ட் திரைப்படம் வெற்றி பெற எவ்வளவு வசூல் செய்ய வேண்டும் என்ற தகவல் கசிந்துள்ளது.

அதாவது 1.5 மில்லியன் டாலர் வசூல் செய்தால் மட்டுமே இந்த படம் அமெரிக்காவில் வெற்றியடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.