BB Akshara in Upcoming Movie

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

BB Akshara in Upcoming Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் ஏழு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இன்னும் ஓரிரு வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து சஞ்சீவ் வெளியேற்றப்பட்டார். அவருக்கு முன்னதாக அக்ஷரா மற்றும் வருண் என இருவரும் ஒரே நாளில் வெளியேற்றப்பட்டனர்.

Kottachi-யின் மகளின் பேச்சால் கை எடுத்து கும்பிட்ட Suseenthiran 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄

‘பொங்கல் பரிசு தொகுப்பு’ திட்டம் : முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள் இருவரும் மிக பிரபலமான தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மையான தகவல் என தெரியவில்லை. ஒருவேளை உண்மையாக இருந்தால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.