BB 2nd Week Elimination : Vanitha Not Exit from BB? | Bigg Boss Tamil | Bigg Boss 3 | vanitha | Kollywood Cinema news | Kamal Haasan
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரம் மோகன் வைத்யா காப்பாற்றப்பட்டதை தொடர்ந்து வனிதாவும் வெளியேறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

BB 2nd Week Elimination : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் வார எலிமினேஷனில் பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்.

அவரை தொடர்ந்து இந்த வார நாமினேஷன் லிஸ்டில் மோகன் வைத்யா, வனிதா, சரவணன், மீரா மிதுன், மதுமிதா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

நீயெல்லாம் பொம்பளையா? வனிதாவை பற்றி அவர் மகன் என்ன சொல்கிறார் பாருங்க – வைரலாகும் வீடியோ.!

இவர்களில் மோகன் வைத்யா காப்பாற்றப்பட்டு விட்டதாக கமல்ஹாசன் அறிவித்து இருந்தார். இதனையடுத்து வனிதா வெளியேற்றப்பட இருப்பதாகவும் தகவல் கிடைத்திருந்தது.

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி வனிதா வெளியேற்றப்பட மாட்டார். அவர் சீக்ரெட் ரூமிற்கு அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே முதல் சீசனில் சுஜா வருநீயும் இரண்டாவது சீசனில் வைஷ்ணவியும் சீக்ரெட் ரூமிற்கு அனுப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.