Vanitha Son Video : Sri Hari Says About Her Mother - Inside the Video | Bigg Boss | Bigg Boss Tamil | Kamal Haasan | bigg Boss 3
வனிதாவை பற்றி அவருடைய மூத்த மகன் ஸ்ரீ ஹரி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vanitha Son Video : பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான வனிதா பிரபல நடிகரான விஜயகுமாரின் மூத்த மகள் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று.

இவருக்கும் குடும்பத்திற்கும் இடையே ஏற்கனவே பல பிரச்சனைகள் இருந்து வந்தன, தன்னுடைய தந்தை என்றும் பாராமல் வனிதா பல பேட்டிகளில் கண்டபடி விமர்சனம் செய்து வந்தார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் அவருடைய செயல்பாடுகள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு வெறுப்பை தான் ஏற்படுத்தி வருகின்றன.

வனிதாவின் மீதுள்ள வெறுப்பால் ரசிகர்கள் அவருடைய குடும்ப பிரச்சனை சார்ந்த வீடியோக்களை வெளியிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே வனிதா அவருடைய மகனின் கழுத்தை நெறிக்கும் வீடியோ வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைத்தது.

தற்போது மீண்டும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மகன் ஸ்ரீ ஹரி நான் நீதிபதியே சொன்னாலும் என் அம்மாவிடம் இருக்க மாட்டேன்.

என்னால் மாற்றான் தந்தையுடன் இருக்க முடியாது என பேசியுள்ளார். அன்று ஸ்ரீ ஹரி கூறிய படியே அவர் இன்றுவரை வணிதாவிடம் செல்லவே இல்லை. தாத்தா விஜயகுமாரிடம் தான் வளர்ந்து வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க பிக் பாஸ் வீட்டுக்கு வராமல் இருந்தால் கூட ஒருவேளை உங்கள் மகன் உங்களிடம் வந்திருப்பான்.

ஆனால் இதெல்லாம் பார்த்த பிறகு உங்கள் மகன் உங்களிடம் வருவதெல்லாம் கேள்வி குறி தான் என கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.