Balaji Murugadoss Vs Rio Gang

அர்ச்சனா, ரியோ, நிஷாவை கதறவிட்ட பாலாஜி முருகதாசுக்கு ட்விட்டர் பக்கங்களில் ஆதரவு குவிந்து வருகிறது.

Balaji Vs Rio Team : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். நிகழ்ச்சி நான்காவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்புக்கு காரணமான போட்டியாளர்களில் ஒருவராக பாலாஜி முருகதாஸ் இருந்து வருகிறார்.

நேற்று இவர் கொண்டிருந்த போது வீட்டின் தலைவி என அர்ச்சனா அவரை எழுப்பி வீட்டைக் கூட்டுமாறு கூறினார். இதனால் பாலாஜி அடுத்த வாரம் தலைவரா நான்தான் எல்லாரையும் அம்மியில் வைத்து அரைக்க விடுறேன் என கூறினார்.

இதனை வைத்தே அர்ச்சனா ரியோ நிஷா உள்ளிட்டோர் பெண்கள் என்றால் கேவலமாக போச்சா?? என வம்பிழுக்க தொடங்கி விட்டனர்.

ஆனால் பாலாஜி முருகதாஸ் அதனை சாதாரணமாக தான் சொன்னார். இதனை பெரிய விஷயமாக பேசிய அறந்தாங்கி நிஷா, ரியோ மற்றும் அர்ச்சனாவை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

இந்த மூவரும் எல்லோருக்கும் சப்போர்ட் செய்தது போல சேப் கேம் விளையாடி வருவதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மூவரையும் ஒத்த ஆளா பாலாஜி முருகதாஸ் வச்சி செஞ்சிட்டாரு எனவும் அவரை பாராட்டி வருகின்றனர். ட்விட்டர் பக்கத்தில் பாலாஜி முருகதாஸ் என்ற டேக் டிரண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

அவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு குவிந்து வருகிறது.

https://twitter.com/gurunathaa4/status/1321270938416025601?s=19
https://twitter.com/sharmeiarun/status/1321269029106057217?s=19
https://twitter.com/AmirthuR/status/1321268026180694016?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.