நான் கடவுள் சர்ச்சையில் உண்மையில் நடந்தது என்ன அஜீத்தை ரூமுக்குள் அடித்தாரா பாலா என்பது குறித்து அவரே பதில் அளித்துள்ளார்.

Bala About Issues With Ajith : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் உருவாக இருந்து பின்னர் இவர் தவறவிட்ட படங்கள் சில உண்டு. அப்படியான படங்களில் மிக முக்கியமான ஒன்று தான் நான் கடவுள். பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான இந்த படத்தில் முதன்முதலாக நடிக்க இருந்தது அதுதான். இதற்காக அஜித் அவர்களும் முழுவீச்சில் தயாராகி இருந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான பின்னர் இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார்.

நான் கடவுள் சர்ச்சையில் நடந்தது என்ன?? அஜித்தை அடித்தாரா பாலா?? - முதல் முறையாக அவர் சொன்ன பதில் ( வீடியோ )

பாலா மற்றும் அஜித் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்தது. இந்த பிரச்சனையில் பாலா அஜித்தை ரூமிற்கு அழைத்துச் சென்று அடித்ததாக கூட சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இது குறித்து பேட்டி ஒன்றில் பாலாவிடம் கேட்கையில் நான் அஜித்தை அடித்ததாக வெளிவந்த தகவல்கள் எல்லாம் பத்திரிக்கையாளர்களின் கற்பனை. நான் அஜித்தை அடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

நான் கடவுள் சர்ச்சையில் நடந்தது என்ன?? அஜித்தை அடித்தாரா பாலா?? - முதல் முறையாக அவர் சொன்ன பதில் ( வீடியோ )

மேலும் அப்போது என்னதான் நடந்தது என மீண்டும் தொகுப்பாளர் சங்கீதா கேள்வி எழுப்ப இதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என பதிலளித்துள்ளார். இவருடைய இந்த பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.