புதிய சீரியல் வருகையால் முடிவுக்கு வர உள்ளது விஜய் டிவி சீரியல்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து சீரியல் முடிந்த மறுநாளே இதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக தொடங்கியது. இதில் நாயகனாக சிம்பு சூர்யன் நடிக்க நாயகியாக வினுஷா தேவி நடித்து வருகிறார்.

ஆனால் இந்த சீரியல் தொடங்கிய முதலே பெரிய அளவில் வரவேற்பு இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் தற்போது 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. ஆனாலும் TRP ரேட்டிங் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது.

இதன் காரணமாகவும் கிழக்கு வாசல் ஏற்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ள காரணத்தினாலும் இந்த சீரியலை விஜய் டிவி முடிவுக்கு கொண்டுவர இருப்பதாக தெரிய வந்துள்ளது. விரைவில் பாரதி கண்ணம்மா 2 கிளைமாக்ஸை எதிர்பார்க்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்த தகவலை கேட்டு பாரதி கண்ணம்மா 2 சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.