நடிகை சாரா ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

தமிழ் சினிமாவில் ஏ எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வ திருமகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் சாரா.

இதனை தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்து வந்த இவர் இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 படத்தில் இளம் வயது நந்தினியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது நடிகை சாராவை ஹீரோயினாக அறிமுகம் செய்ய போவதாக கூறியுள்ளார் ஏ எல் விஜய். இவர் அளித்த பேட்டி ஒன்றில் மணிரத்னம் சாராவை தெய்வீக அழகுடன் சித்தரித்து விட்டார். இதனால் அவர் தைரியமாக நாயகியாக நடிக்கலாம்.

இதனால் 2025-ல் சாராவை ஹீரோயினாக அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.