கேன்டீன் கான்ட்ராக்ட் எடுக்க போன பாக்கியாவிற்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா கேண்டீன் காண்ட்ராக்ட் எடுக்க அரசு அலுவலகத்திற்கு வந்து அப்ளிகேஷன் கேட்க பத்தாயிரம் ரூபாய் பணம் கட்ட சொல்கின்றனர்.
எழில் பணத்தை கட்டிவிடலாம் கேன்டீன் காண்ட்ராக்ட் கிடைத்து விடுங்கள் என சொல்ல பிறகு பாக்யாவும் பணத்தை கட்ட பிறகு முன் பணமாக ஒரு லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என அதிர்ச்சி கொடுக்கின்றனர். அதனை தொடர்ந்து பாக்யா பழனிச்சாமியை சந்தித்து பேச அவர் நான் வேணும்னா பணம் தருவேன் என்று சொல்ல பாக்யா பணத்தை நானே ஏற்பாடு செய்து கொள்கிறேன். என்னால் முடியாத பட்சத்தில் உங்களிடம் கேட்கிறேன் என சொல்கிறார்.
பிறகு வீட்டிற்கு வந்த பாக்யா இந்த விஷயம் திருப்பி சொல்ல அதைக்கேட்ட ஈஸ்வரி ஒரு லட்சம் ரூபாய் பணம் கட்டணுமா? இதெல்லாம் வேண்டாம் என சொல்ல கோபி நீங்க வேணா எழுதி வச்சுக்கோங்க இந்த காண்ட்ராக்ட் நிச்சயம் பாக்யாவுக்கு கிடைக்காது என பேசுகிறார். பாக்யா எல்லாம் நல்ல தான் நடக்கும் நான் கட்ட தான் போறேன் என உறுதியாக இருக்க ராமமூர்த்தி ஏதாவது ஏற்பாடு பண்ணட்டுமா என்று கேட்கிறார். ஆனால் பாக்கியா வேண்டாம் மாமா நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறி விடுகிறார்.
அதனைத் தொடர்ந்து எல்லோரும் பணத்திற்கு என்ன செய்வது என்று உட்கார்ந்து யோசிக்க பாக்கியா மசாலா அரைக்கும் மிஷினை நிற்க முடிவெடுக்கிறார். மேலும் மாமா ராமமூர்த்தி இடம் வீட்டை காலி பண்ண அதற்கான அட்வான்ஸ் கொஞ்சம் சீக்கிரம் கொடுக்க சொல்லி கேளுங்க என கூறுகிறார்.
அதன் பிறகு பாக்யாவுடன் சேர்ந்து வேலை செய்தவர்கள் வீட்டுக்கு வந்து பணம் கேட்க பாக்யா கேன்டீன் காண்ட்ராக்ட் கிடைக்கப் போவதையும் அதன் மூலம் உங்கள் பணமும் வேலை செய்வதற்கான சம்பளம் கிடைக்கும் என்று சொல்ல அவர்கள் சந்தோஷத்துடன் அங்கிருந்து விடை பெறுகின்றனர். ஈஸ்வரி அகல கால் வைக்காத அவ்வளவுதான் நான் சொல்லுவேன் என்று சொல்ல பாக்கியா செல்வியிடம் அப்ப எப்பவுமே இப்படித்தானே பாத்துக்கலாம் என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.