
அதிரடியான கதைக்களம் என தனக்குத்தானே ஆசை வைத்துக் கொண்டுள்ளது பாக்கியலட்சுமி சீரியல்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் விறுவிறுப்பான கதை களத்தோடு ஒளிபரப்பாகி வந்தாலும் ஏற்கனவே கோபிக்கு இரண்டு பொண்டாட்டி இருக்கும் நிலையில் தற்போது செழியனும் அதே ரோட்டில் பயணிக்க சீரியல் மீது ரசிகர்களுக்கு வெறுப்பு உண்டாகியுள்ளது.

இப்படியான நிலையில் அதிரடியான கதை களத்தில் என ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அமிர்தாவின் முன்னாள் கணவரான கணேஷ் இறந்து விட்டதாக நினைத்து நிலையில் அவர் உயிரோடு வீட்டுக்கு வந்து தன்னுடைய அப்பா அம்மாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.
அது மட்டுமல்லாமல் அமிர்தா எங்க அம்மா என்று கேட்க இருவரும் செய்வதறியாது நிற்கின்றனர். இதனால் இனி அமிர்தா வாழ்க்கையில் நடக்கப்போவது என்ன என்ற பரபரப்பான கதை களத்துடன் சீரியல் பயணிக்க இருப்பதாக அந்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி இரண்டு பொண்டாட்டி கதை போய் இப்ப ரெண்டு புருஷன் கதை வந்துருச்சு. நல்லா போய்கிட்டு இருந்த சீரியலை எப்படி நாசம் பண்ணனும்னு உங்ககிட்ட தான் கத்துக்கணும். இதுக்கு நீங்க சுபம் போட்டு போகலாம் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும் அமிர்தாவாக நடித்து வந்த ரித்திகா தமிழ்ச்செல்வி இந்த சீரியலில் இருந்து விலகியது இதனால் தான் என்பது தற்போது உறுதியாகி விட்டதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
