பாக்கியாவைக் கிண்டல் பண்ணும் கோபி, வருத்தத்தில் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
பாக்கியாவை கோபி கிண்டல் பண்ண பாக்கியா வருத்தப்பட்டுள்ளர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனிய காம்பெட்டிஷனில் ஜெயித்து விட பாக்யா என அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். ஆனால் இனியா ஓடி வந்து கோபியை கட்டிப்பிடித்து சந்தோஷப்படுகிறார். இதைப் பார்த்து பாக்கியா வருத்தபட்டு கொண்டிருக்க இனியா கோபியிடம் உங்களால் தான் நடந்துச்சு என்று சொல்லி சந்தோஷப்படுகிறார். பிறகு கோபியை மேடையில் அழைத்து என்னோட வெற்றிக்கு காரணம் என்ன அப்பா தான் எங்க வீட்டுல யாருமே மாஸ்டருக்கு ஒத்துக்கல ஆனா எங்க அப்பா தான் என்ன அனுப்பி என்கரேஜ் பண்ணாங்க, என்று சொல்ல பாக்யா ஒன்றும் புரியாமல் இருக்கிறார். பிறகு இனியா யுவராஜ் மாஸ்டரிடம் டான்ஸ் கிளாஸ் போனதை பற்றி சொல்ல , பாக்கியா வருத்தப்பட்டு வெளியே வந்து விடுகிறார்.
பாக்யா வருத்தப்பட்டு நின்று கொண்டிருக்க எழில் வந்து ஆறுதல் சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து கோபி பாக்யாவை வெறுப்பேற்றும் படி செந்தில் இடம் ஃபோன் பண்ணி இனியா காம்பெடிஷனில் ஜெயித்த விஷயத்தையும் அதற்கு காரணம் நான் தான் என்றும் பேசுகிறார்.பிறகு ஒரு விஐபி கிட்ட பேச வேண்டியது இருக்கு என்று சொல்லி பாக்யாவிடம் வருகிறார் பாக்யாவிடம் நக்கலாக கோபி பேச, எழில் எதுக்கு தேவையில்லாம இப்படி பேசிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டு போக சொல்லுகிறார். உடனே கோபி எங்க அம்மா அப்பாவை ஏமாத்திருக்கலாம். ஆனா என் பசங்கள என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது. என்றெல்லாம் பேச அப்படியெல்லாம் கனவு காணாதீர்கள் என்று எழில் சொல்ல நீ பூஜை போட போறேன் கேட்ட படத்துக்கு என்று சொல்கிறார் இதெல்லாம் உங்ககிட்ட யார் சொன்னது இனியா சொன்னாலா என்று சொல்ல அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்லுகிறார். படத்தோட பூஜைக்கு என்ன கூப்பிடுவியா என்று கேட்க நீங்க யாரு நான் உங்கள கூப்பிடறதுக்கு எங்க அம்மா தான் எனக்கு மோட்டிவேஷன் கொடுத்தாங்க அவங்க தான் ஃபர்ஸ்ட்ல நிப்பாங்க என்று சொல்ல கோபி அமைதியாக நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார். நீங்க மட்டும் பூஜைக்கு வந்திராதீங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர்.
மறுபக்கம் இனியா வீட்டிற்கு ஓடிவந்து ஈஸ்வரி இடம் விஷயத்தை சொல்ல, அவரும் சந்தோஷப்படுகிறார்.பிறகு இனியாவிற்கு ஃபோன் வர சரி பாட்டி என் ஃப்ரெண்ட்ஸ் போன் பண்ணிக்கிட்டே இருக்காங்க நான் போய் விஷயத்தை சொல்லிட்டு அப்புறம் உங்ககிட்ட சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு மேலே கிளம்ப அந்த நேரம் பார்த்து பாக்யா அவரை நிறுத்தி டான்ஸ் கிளாஸ் போறேன்னு சொன்ன ஆனா நான் முடியாதுன்னு சொன்னதுக்கு அப்புறம் உங்க அப்பா கிட்ட சொல்லி நீ டான்ஸ் கிளாஸ்க்கு போய் இருக்க ஆனா என்கிட்ட எந்த விஷயமும் சொல்லல மேடையில் இருக்கும் போது சொன்னா எப்படி இனியா என்று கேட்கிறார்.
உன் மேல அக்கறையா இருக்கறதுனால தான் கடைசி நிமிஷம் வரைக்கும் உன்ன டான்ஸ் கிளாஸ் சேர்க்க முடியலையே என்று எழில் கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன் என்று சொல்ல, அப்படியெல்லாம் இல்லம்மா உனக்கு என் மேல் அக்கறை எல்லாம் இல்ல உனக்கு ரெஸ்டாரன்ட் தான் முக்கியம் என்று சொல்லுகிறார். உடனே செழியன் வர என்ன பிரச்சனை என்று கேட்கிறார். டாடி டான்ஸ் கிளாஸில் சேர்ந்த ஒரு பிரச்சனையா பேசிக்கிட்டு இருக்காங்க செழியன் யாரையும் பேச விடாமல் இது அவளோட முக்கியமான ஒரு ஸ்டேஜ் என்று யாருக்கும் சரியாக பதில் சொல்லாமல் இனியாவே மேலே அழைத்துச் செல்கிறார் இதனால் பாக்கியம் நான் எதுவும் தப்பா பேசலையே என்று கேட்க ஜெனி அதெல்லாம் பொறுமையா சொன்னா என்ன கேட்டுப்பா நம்ம சொல்லிக்கலாம் என்று சொல்லுகிறார் . இது மட்டும் இல்லாமல் ஜெனி நாளைக்கு பாக்கியாவே ரெஸ்டாரன்ட் இருக்கு போக கூடாது என்று சொல்லி நீங்க ,நான் ,ஈஸ்வரி பாட்டி மற்றும் அமிர்தா என நாள் வரும் ஒரு இடத்துக்கு போகப் போகிறோம் என்று சொல்லி சர்ப்ரைஸ் என்று சொல்லுகிறார்.
பிறகு நால்வரும் எங்கே போகிறார்கள்? என்ன செய்யப் போகிறார்? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.