Web Ads

ட்ரெண்டிங்கில் சத்யாவின் திருட்டு வீடியோ, ரோகினி போட்ட பிளான், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

சத்யாவின் வீடியோவை சிட்டி ரிலீஸ் செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் இன்றைய எபிசோடு விஜயா பூ கட்டுபவர்களிடம் ஓவராக பேசி, ஆட்டோவில் ஏறி சென்றார் பிறகு மீனா வீடு வீடாக சென்று பூ கொடுத்துக் கொண்டிருக முத்து போன் பண்ணுகிறார் இது என்ன புது நம்பரில் இருந்து பண்ணி இருக்கீங்க என்று கேட்க, பேசாம இருக்க முடியல அதனால தான் போன் வாங்கி பேசிக்கிட்டே இருக்க போன்ல இருக்கற யார் நம்பர் ஒன் நியாபகம் இல்ல உன் நம்பர் மட்டும் தான் ஞாபகம் தெரியுது நான் உன் மேல எவ்வளவு பாசம் வெச்சிருக்கேன் என்று சொல்ல சரி அப்புறம் என்ன நடந்துச்சு அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல, ஆனா ஆனால் என் தலை மேல பல்லி விழுந்திடுச்சு, அதை நான் தட்டி விட்ட ஆனா அத்தை ,ரோகினி,மனோஜ் எல்லாருமே அவங்களும் மாத்தி மாத்தி தட்டி விட்டாங்க பல்லி விழுந்தால் சகுனும் சரி இல்லன்னு சொல்லுவார்கள் அதனால பார்த்தப்போ அவங்களுக்கு எல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல எனக்கு. தான் துன்பம் என்று போட்டு இருந்தது.அதுதான் கஷ்டமா இருக்கு என்று சொல்ல,முத்து அவருக்கு ஆறுதல் சொல்கின்றனர்.

SiragadikkaAasai Serial Today Episode Update
SiragadikkaAasai Serial Today Episode Update

பிறகு மீனா சத்யாவை வர சொல்லி முத்துவிற்கு ஒரு புதிய போனை வாங்குகின்றனர். அந்த கடையில் இருக்கும் இரண்டு பேர் போனை பார்த்துக் கொண்டிருக்க சத்தியா விஜயாவிடம் திருடிய வீடியோவை சிட்டி லீக் செய்துள்ளார். வீடியோவை பார்த்த இரண்டு பேர் இவன மாதிரியே இருக்கு என்று சொல்ல தப்பிட்டான் எப்படியும் போலீஸ்ல கொடுத்துடுவாங்க என்று சொல்லுகின்றனர்.

மறுபக்கம் வித்யா ரோகினி இடம் சிட்டி வீடியோவ ரிலீஸ் பண்ணிட்டான் செம வியூஸ் போயிட்டு இருக்கு என்று சொல்ல உடனே ரோகினி சந்தோஷப்படுகிறார் உடனே மீனாவ எங்க மாமியார் வெளியே அனுப்பிடுவாங்க இந்த விஷயத்தை கேட்டால் ஸ்ருதியோட அம்மா அப்பாவும் அவங்கள கூட்டிட்டு போய்டுவாங்க என்று சொல்ல வித்யா நீ ஒருத்தர் வாழ்வதற்காக எல்லாரையும் வீட்டை விட்டு அனுப்புற கஷ்டப்பட்டு தேடிகிட்ட வாழ்க்க அதனால் சீக்கிரம் விட்டுக் கொடுக்க மாட்டேன் அதனால யாரு கஷ்டப்படுறாங்களோ பார்க்க மாட்டேன் என்று சொல்லுகிறார் அது சரி உங்க மாமியார் பாப்பாங்களா என்று கேட்க அதற்கு ஒரு ஐடியா இருக்கு லேப்டாப் எடுத்துட்டு வா என்று சொல்லுகிறார்.

ரோகினி மனோஜை சந்திக்க ஷோரூம் வருகிறார். சோகமாக இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என்று கேட்க பொண்ணு இல்ல மனோஜ் நீங்க மனோஜோட வைப் தானே என்று கேட்டு என்கிட்ட ஒரு லெட்டர் குடுத்து இருக்காங்க என்று நைசாக மனோஜிடம் அதை கொடுக்க அவர் என்னவா இருக்கும் என்று எடுத்து படித்து பார்க்கிறார். அதில் உங்க குடும்ப பிரச்சனை ஒன்னு ட்ரெண்டிங்ல இருக்கு பாரு என்று சொல்ல அவர் வீடியோவை ஓப்பன் பண்ணி பார்க்க சத்யாவை பார்த்து விடுகிறார்

இதனால் மனோஜ் டென்ஷன் ஆகி முத்து என எத்தனை நாள் திருட்டு பையன சொல்லி இருக்கான் ஆனா இன்னைக்கு அவன் மச்சானே இந்த வேலையை பார்த்திருப்பான் முதல்ல நம்ம அம்மாகிட்ட சொல்லணும் என்று சொல்ல ரோகினி ஒன்றும் தெரியாதது போல் மனோஜிடம் வேணா மனோஜ் இதனால நம்ம குடும்ப பிரச்சனை தான் பெருசாகும் மீனாவை திட்டுவாங்க வீட்டை விட்டு அனுப்பிடுவாங்க என்றெல்லாம் சொல்ல மனோஜ் அவளே திருட சொல்லி இருப்பா என்று சொல்ல அவர்கள் அப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க என்று மனோஜிடம் சொல்லி நாடகமாடுகிறார். எப்படி இருந்தாலும் தெரிய தான் போகுது நம்மளே சொல்லிடலாம் என்று சொல்லிவிட்டு அம்மா டான்ஸ் கிளாஸ்ல தான் இருப்பாங்க நீ போய் பாரு என்று சொல்லுகிறார்.

ரோகினி விஜயாவிடம் உண்மையை சொல்வாரா விஜயா என்ன செய்யப் போகிறார் என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update
SiragadikkaAasai Serial Today Episode Update