சபதம் எடுத்த பாக்யா, இனியா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

பாக்கியா சபதம் ஒன்றை எடுக்க இனிய வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் ப்ரொடியூசர் எவ்வளவு கெஞ்சியும் அவர் வேறு ஒருத்தருக்கு வாய்ப்பு கொடுத்து விட்டதாக சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகிறார். பிறகு கோபி சாப்பிட்டுக் கொண்டிருக்க ராதிகா எதுக்கு போன பாத்துக்கிட்டே சாப்பிடுறீங்க என்று சொல்ல ஒரு முக்கியமான சேட் என்று சொல்கிறார். என்ன விஷயம் என்று கேட்க பாக்யாவை பத்தி தான் என்று சொல்ல அவங்கள பத்தி நீங்க எதுக்கு பேசிகிட்டு இருக்கீங்க என்று ராதிகா கேட்கிறார் நாளை சொல்ல 11 லட்சம் கொடுக்கணும் இல்லன்னா அவ்வளவுதான் ஜெயிலுக்கு கூட அனுப்பிடுவாங்க என்று சந்தோஷமாக சொல்ல எதுக்கு இப்படி பேசிட்டு இருக்கீங்க. என்று சொல்ல என்ன ராதிகா எல்லாம் இனி மறந்துட்டியா எனக்கு எங்க வீட்ல எவ்வளவு பெரிய துரோகம் பண்ணி இருக்காங்க என்று சொல்ல அது உங்க வீட்ல பண்ணத நான் மறக்கல அது உங்க அம்மாவ தான் நீங்க ஏதாவது பண்ணனும் பாக்கியாவை எதுக்கு பண்ணனும் என்று கேட்க, வேற யாரை எது பண்ணாலும் எங்க அம்மாவுக்கு வலிக்காது ஆனா பாக்யாவுக்கு ஏதாவது வந்தா தான் அவங்க துடிச்சு போவாங்க என்று வன்மமாக பேசுகிறார். உடனே நான் கடவுள் கொடுக்கிறது சந்தோஷமா அனுபவிக்கிறது நீ தடுக்காத என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

ராதிகாவின் அம்மா ராதிகாவிடம் அவங்க என்ன ஆட்டம் ஆடுனாங்க மாப்பிள்ளை வெளியே தள்ளினார்கள் உன்னை வெளியே அனுப்புனாங்க இப்ப எல்லாம் தண்டனை கிடைக்கும்னு சொல்லுவாங்க ஆனா கண்ணு முன்னாடியே நிமிஷத்துல நடக்குது என்று சொல்லி சந்தோஷப்படுகிறார் ராதிகாவின் அம்மா. பிறகு ரெஸ்டாரண்டில் இருந்து பாக்யாவை கைது செய்வது போல எழில் கனவு கண்டு அலறி அழுகிறார். அமிர்தா ஆறுதல் சொல்லி அவரை படுக்க வைக்கிறார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update
BaakiyaLakshmi Serial Today Episode Update

மறுபக்கம் பணத்தை ரெடி பண்ண வீட்டிலே இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து எண்ணி பார்க்கிறார் பிறகு நகைகளை எடுத்து பார்த்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து இனியா வர என்னம்மா பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்கிறார் ஒன்னும் இல்லை இனிய பணம் கொடுக்கிறேன் என்று முடிவு பண்ணும் இல்ல அதுக்காக தான் நகையை அடமானம் வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். உன்னோட நகைதா என்று சொல்ல இனியா பரவால்லம்மா எடுத்துக்கோ அது எதுக்கு என்கிட்ட சொல்ற நீ எடுத்து கொடுத்தது தானம்மா என்று கேட்க இதெல்லாம் உன் கல்யாணத்துக்காக எடுத்தது இனியா என்று சொல்ல நீ வித்தா கூட எனக்கு பிரச்சனை இல்லம்மா நீ இப்ப இருக்குற பிரச்சனையை பாரு என்று சொல்ல பாக்யா நான் உடனே திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்று இனியாவிடம் சொல்ல, தரலனாலும் பரவால்ல அம்மா என்று சொன்ன பாக்யா சாரி என்று இனியாவிடம் சொல்கிறார்.

இனியா ஜெனி இடம் அம்மா நகை எல்லா அடமான வைக்க போறாங்க அது கூட பத்துமா தெரியல அக்கா என்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து ஹோட்டலில் வேலை செய்யும் பெண்கள் வர அவர்கள் இனிமேல் வேலை செய்ய பயமாயிருக்கு எல்லாரும் திட்டுறாங்க என்று சொல்ல அவர்களுக்கு பாக்யா இதுக்கு முன்னாடி எவ்ளோ பிரச்சனை வந்திருக்கு அது எல்லாத்தையும் நம்ம மீண்டு வரலையா இதுலையோ கண்டிப்பா மீண்டு வருவோம் என்று சொல்லுகிறார்.

பாக்கியா என்ன முடிவெடுக்கிறார்? குடும்பத்தாரிடம் என்ன பேசுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update
BaakiyaLakshmi Serial Today Episode Update