Web Ads

இனியாவுக்கு தெரிந்த உண்மை, கோபப்பட்ட சுதாகர், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவுக்கு உண்மை தெரிய வர,சுதாகர் நித்திஷ் மீது கோபப்பட்டு உள்ளார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 30-06-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 30-06-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ரெஸ்டாரண்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்க இனியா உக்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் அங்கெல்லாம் நம்மளுக்கு வாய்ப்பு கிடைக்காது அந்த போட்டியில் நம்மால் கலந்துக்க முடியாது என்று பேசிக்கொண்டு இருக்க அதெல்லாம் இல்ல கண்டிப்பா முடியும் என சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு பாக்கியா வீட்டில் ஈஸ்வரிக்கு சாப்பாடு போட செழியன் வரலையா என்று கேட்க அவ இன்னிக்கு ஜெனி வீட்டிலேயே தங்கறதா சொல்லி இருக்கா என்று சொல்லுகிறார். இனி எப்ப வருவ நான் போன் பண்ணி கேக்குறேன் என ஈஸ்வரி பேசிக் கொண்டிருக்க கோபி வருகிறார்.

என்ன விஷயம் கோபி என்று கேட்க உங்களுக்கு டேப்லெட் தான் வாங்கிட்டு வந்தேன் என்று சொல்லிக் கொடுக்கிறார் ஈஸ்வரி சாப்பிடச் சொல்ல இல்ல மாமா சாப்பிட்டேன் என்று சொல்லுகிறார் உடனே பாக்யா ஈஸ்வரியை கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்க சுடுதண்ணீர் வேண்டுமா என கேட்டு வைத்து கொடுக்க கிச்சனுக்கு போக இனியா பேசியதை கோபி நினைத்துப் பார்க்கிறார். உடனே பாக்யாவிடம் அத்தை எப்படி இருக்காங்க என்று கேட்க ஈஸ்வரி பாக்யா இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். என்ன சொன்னீங்க என்று பாக்கியா கேட்கல உங்க அம்மா எப்படி இருக்காங்க கூட பிறந்தவர்களை எப்படி இருக்காங்க என்று விசாரிக்க பாக்கியா ஆச்சரியமாக பார்க்கிறார்.

நல்லா இருக்காங்க என்று சொல்ல உங்க அம்மாவை கேட்டதா சொல்லு என்று சொல்லுகிறார் பாக்யாவும் சரியென சொல்லுகிறார். பாக்கியா கிச்சனின் வேலை பார்த்துக் கொண்டிருக்க இனியா போன் போடுகிறார். சாப்பிட்டியா என்று கேட்க சாப்பிட்டேன்மா என்று சொல்லுகிறார் உடனே பாக்கியா இன்னைக்கு ஏதாவது மழை வருமா சொன்னாங்களா என்று கேட்க அப்படி எல்லாம் எதுவும் இல்லையே என்று சொல்லுகிறார் எங்க அப்பா இன்னைக்கு நடந்து கொள்வது ரொம்ப வித்தியாசமா இருந்தது. உங்க பாட்டி, அத்தை பத்தி எல்லாம் விசாரிக்கிறார். இப்படி பண்ற ஆள் கிடையாது என்ன அதிசயம் நடந்துச்சுன்னு தெரியல என்று சொன்ன அதுக்கு நான் தான் காரணம் என இனியா பேசிக்கொண்டிருக்க சுதாகர் கோபமாக பேசும் சத்தத்தை கேட்டேன் அப்புறம் போன் பண்றோமா என போனை வைக்கிறார்.

மீண்டும் நிதிஷ் போதையில் இருக்க இனிமை இவனெல்லாம் எப்பவும் காப்பாத்த மாட்டேன் ஒரு வாட்டிக்கு எத்தனை பேர் கிட்ட கெஞ்சி இருக்கேன் தெரியுமா இவ்வளவு ஒழுங்கா திருந்தி வாழ சொல்லு என்று கோபப்பட சந்திரிகா. ஏன்டா இப்படி பண்ணிக்கிட்டு இருக்க என்று பொறுமையாக பேசிக் கொண்டிருக்க இப்பதான் கொஞ்சி கிட்டு இருக்கியா நான் பாட்டுன்னு நிம்மதியா இருந்தேன் நீயும் உன் பையனோ என் வாழ்க்கையில வந்து நிம்மதியை கெடுத்துட்டீங்க என்று சொல்ல இதையெல்லாம் இனியா கேட்டுக் கொண்டிருக்கிறார். நாங்க ஒன்னும் சும்மா வரல பணம் காசு எல்லாம் வச்சிக்கிட்டு தான் வந்தோம் என சொல்ல சந்திரிகா இனியவை பார்த்துவிட்டு அமைதியாகிவிடுகிறார். உடனே சுதாகர் கூப்பிட்டு நீ ஒன்னும் கவலைப்படாதம்மா நித்திஷ் சரியாயிடுவார் நான் பாத்துக்குறேன்னு சொல்லி நீ போமா என சொல்லுகிறார்.

ஆனால் இனியா ரூமுக்கு போகாமல் நித்திசை படுக்க வைத்திருக்கும் ரூமுக்குச் சென்று நீங்க எதுக்கு இப்படி பண்றீங்க இது ரொம்ப கெட்ட பழக்கம் அது மட்டும் இல்லாம உங்க வீட்ல வேற ஒரு ஃபேமிலி ப்ராப்ளமும் இருப்பது போல என்ன விஷயம் என்று கேட்க நீதான் இன்வேஸ்டிகேஷன் பண்ணி கண்டுபிடிச்சுகோ என்று நிதிஷ் சொல்லுகிறார் எழுந்து வெளியில் போக வர இனியா எங்க போறீங்க போகாதீங்க உட்காருங்க என்று சொல்ல இனியாவை பிடித்து தள்ளி விடுகிறார். பிறகு என்ன நடக்கிறது சுதாகர் என சொல்லுகிறார்? இனியாவுக்கு என்ன உண்மை தெரிய வருகிறது? என்பதை இன்றைய எபிசோடு பார்க்க தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 30-06-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 30-06-25