கோபியிடம் பேசாத நிதிஷ், பாக்யா செய்த விஷயம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
கோபியிடம் நித்திஷ் பேசாமல் இருக்க, பாக்யா விஷயம் ஒன்று செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சுதாகர் ஃபோன் பேசிக் கொண்டிருக்க நிதிஷ் வெளியில் போக நிறுத்தி எங்க போற என்று கேட்க பிரென்ட் வீட்டுக்கு என்று சொல்லுகிறார் உடனே சந்திரிகாவை கூப்பிட்டு இனியா வரதுக்குள்ள அவன் உள்ள போய் படுக்க சொல்லு என்று சொல்ல நிதிஷ் முடியாது என்று சொன்ன சந்திரிகாவலி கட்டாயமாக நித்திஷை கூப்பிட்டு அழைத்துச் செல்ல கோபியும் இனியாகவும் வந்து விடுகின்றனர். உடனே சந்திரிகா இவ எதுக்கு அவங்க அப்பனை கூட்டிட்டு வந்து இருக்கா ஒரு வேளை நேத்து நடந்தது சொல்லிட்டாலும் என்று சொல்ல சுதாகர் முகம் மாறுகிறது. உடனே அவரை வரவேற்று உட்கார வைக்க என்ன விஷயம் சம்பந்தி என்று கேட்கிறார்.
நித்திஷிடம் கோபி வணக்கம் மாப்பிள்ளை என்று சொல்ல எதுவும் பேசாமல் சென்று விடுகிறார். ஏன் அவரு பேச மாட்டேங்கிறாரு என்று கோபி கேட்க அவன் இனியா கூட வெளியே போகலாம்னு பிளான் பண்ணி இருந்தா அது நடக்கவில்லை என்றால் அப்செட் ஆயிட்டான் அதெல்லாம் ஒன்னும் இல்ல சம்மந்தி நீங்க வந்த விஷயத்தை சொல்லுங்க என்று சொல்ல இல்ல நாளைக்கு இனியவோட பிறந்தநாள் அதனால அவங்க அம்மா ஷாப்பிங் கூட்டிட்டு போயிருந்தாங்க என்று சொல்ல உங்களுக்கு தெரியுமா சம்மந்தி என்று கேட்க உடனே சுதாகர் என்னோட மருமகள் பிறந்தநாள் போய் எனக்கு தெரியாம இருக்குமா நானே உங்களுக்கு காலைல போன் பண்ணி இருப்பேன் நாளைக்கு வீட்டிலேயே ஒரு பார்ட்டி வைக்கிறதா இருக்கேன் சொந்தக்காரங்க தெரிஞ்சவங்கன்னு எல்லாரையும் கூப்பிட்டு செய்கிற பிளான் இருக்கு நான் எல்லாருக்கும் போன் பண்ணி கூப்பிடுறேன் என சொல்லுகிறார்.
உடனே கோபி கொஞ்ச நேரத்தில் கிளம்பி விட இனியா அவரை வழி அனுப்ப செல்லுகிறார் உடனே சந்திரிகா அவ பர்த்டே உங்களுக்கு தெரியுமா என்று கேட்க எனக்கு வேற வேலை இல்லையா அவங்க அப்பா சொன்னதுக்கு அப்புறம் தான் தெரியுமென்று சொல்லுகிறார் அப்ப எதுக்கு இதெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க உன் பையன் பண்ண வேலையை பார்த்தியா, அவரு வணக்கம் சொல்றாரு கண்டுக்காம போறான் கேள்வி மேல கேள்வி கேட்டா என்ன ஆகிறது என்று சொல்ல எனக்கே அந்த குடும்பத்தை பிடிக்கல என சந்திரிகா சொல்லுகிறார் அப்ப நான் நீ உன் பையனுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டியதுதானே என்று சொல்ல உன்னால முடியாது ஏன்னா உன் பழைய பண்ண வேலை அப்படி இவனுக்கு இனியா கிடைச்சது ரொம்ப பெரிய விஷயம் சந்தோஷமா வாழ சொன்னா இது மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கான் என்று சொல்ல பிறகு நாளைக்கு நீ ஒரு கிப்ட் வாங்கிடு என்று சொல்லுகிறார்.
மறுநாள் காலையில் ஈஸ்வரியும் பாக்யாவும் கோவிலில் இனியாவிற்கு அர்ச்சனை செய்துவிட்டு வர கோவிலில் பாக்யாவிற்கு தெரிந்த பெண் வர பாக்யா அவரிடம் பேசிவிட்டு கோவிலில் ஒரு இடத்தில் இருவரும் உட்காருகின்றனர் பிறகு பாக்யாவிடம் யார் அந்த பொண்ணு என்று கேட்க நம்ம தெருவுல தான் இருக்காங்க வெளிநாட்டுக்கு போயிட்டு வந்திருக்காங்க என்று சொல்ல கல்யாணம் பண்ணிக்கலையான்னு கேட்க இல்ல அத்தை ரொம்ப நாளா கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருந்தாங்க இப்பதான் வீட்ல வரேன்னு பாக்குறாங்க ஏன்னா நீங்க உங்க பையனுக்கு பாருங்க என்று சொல்ல ஈஸ்வரி ஒன்னும் தேவையில்லை என்று சொல்லுகிறார். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் சுதாகர் ஈஸ்வரிக்கு போன் போன் போட்டு பர்த்டே ஃபங்ஷனுக்கு கூப்பிடுகிறார் பக்கத்தில் பாக்கியா இருப்பதாக சொல்ல வரையும் கூப்பிடுகிறார்.
பிறகு சுதாகர் நிதிஷிடம் என்ன சொல்லுகிறார்? அதற்கு சந்திரிகா பதில் என்ன? பாக்யா என்ன செய்கிறார்?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
