Web Ads

ராதிகாவிடம் ஈஸ்வரி கேட்ட கேள்வி, கோபப்பட்ட கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ராதிகாவிடம் ஈஸ்வரி கேட்ட கேள்விக்கு,கோபி கோபப்பட்டுள்ளார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 17-06-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 17-06-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ஈஸ்வரியுடன் வருவதாக சொல்ல வேண்டாம் நானே போகிறேன் என்று சொல்லுகிறார். செழியன் நான் வேணும்னா கார்ல விடவா பாட்டி என்று கேட்க ஒன்னும் வேணாம் நீ உன் வேலையை பாரு என்று சொல்லிவிட்டு ஒரு வழியாக இருவரையும் சமாளித்துவிட்டு ஆட்டோவில் கிளம்புகிறார். மறுபக்கம் ராதிகா ரெஸ்டாரண்டில் காத்துக்கொண்டிருக்க ஈஸ்வரி வந்தவுடன் அவரை வரவேற்று உட்கார வைக்கிறார்.

வழக்கம் போல் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டு இப்போ நீ மயூ கூட தனியா தானே இருக்க என்று கேட்கிறார் ஆமாம் என்று சொல்ல, இனியாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு எழில் குடும்பமா ஷூட்டிங் எடுக்க கோவா போயிருக்கான் என்றெல்லாம் சொல்ல எல்லாமே பாக்கியா எனக்கு சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார் அப்போ ரெஸ்டாரண்ட் தகுந்த விஷயமும் உனக்கு தெரியுமா என்று கேட்க தெரியும் என்று சொல்லுகிறார்.

சரி நான் விஷயத்துக்கு வரேன் என்று சொல்லிவிட்டு என் பையன நெனச்சு எனக்கு ரொம்ப கவலையா இருக்கு அவன் தனியா வீடு எடுத்து தங்கி இருக்கான் அவனுக்கு பேச்சு துணைக்கு கூட ஆள் கிடையாது என்று சொல்ல பாக்யாவும் தான் தனியா இருக்காங்க என்று கேட்கிறார் பொம்பளைங்களுக்கு வேலை செய்வதில்லை தெரியாது ஆனால் எங்களுக்கு அப்படி இல்லை என்று சொல்லுகிறார். நான் சொல்றேன் நீ என்ன தப்பா நினைச்சுக்காத நீ திரும்பவும் கோபி கூட சேர்ந்து வாழறியா என்று கேட்க ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.

உடனே யோசிக்காமல் நான் என் வாழ்க்கையில இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன் அந்த நிம்மதி கெட்டுப் போக நான் விரும்பல என்று சொல்ல அப்போ கோபி கூட வாழ்வது உனக்கு நிம்மதி இல்லையா என்று கேட்க ஆமாம் என்று ராதிகா சொல்லுகிறார். மயூ அப்பா வேண்டாமா என்று கேட்க வேண்டாம் அம்மா நான் இருக்கேன் அதுவே போதும் என்று சொல்லுகிறார் இதுக்கு முன்னாடி வந்த பிரச்சனை எல்லாமே பெரும்பாலும் என்னால தான் இருக்கும் அதுதான் இப்ப நானே சேர்ந்து வாழணும்னு சொல்றப்போ ஏன் மறுக்கிற நீ வேணா யோசிச்சுட்டு போன் பண்ணுவேன்னு நான் நம்பலாமா என்று கேட்க இந்த விஷயமா நான் உங்களுக்கு ஃபோனே பண்ண மாட்டேன் என்று முடிவில் உறுதியாக இருக்க ஈஸ்வரி வருத்தப்பட்டு சென்று விடுகிறார். கொஞ்ச நேரத்தில் ரெஸ்டாரண்டில் ராதிகா வெயிட் பண்ணிக் கொண்டிருக்க கோபி வருகிறார். ராதிகாவிடம் என்ன சர்ப்ரைஸ் ராதிகா என்ன விஷயம் என்று கேட்க நான் உங்களை மீட் பண்ணுவேன்னு நினைக்கல கோபி ஆனா மீட் பண்ண வேண்டிய சூழ்நிலை ஆயிடுச்சு என்று சொல்லுகிறார்.

கோபி ராதிகாவிடம் இப்ப ரொம்ப ஸ்லிம்மா அழகா இருக்க ராதிகா காலேஜ்ல பார்த்த மாதிரி இருக்கு என்று சொல்ல இப்ப கொஞ்சம் மனசு நிம்மதியா இருக்கு பிட்னஸ்ல கவனம் செலுத்திக்கிட்டு வரேன் என்று சொல்ல சரி என்ன விஷயம் என்று கேட்கிறார் உங்க அம்மா வந்து என்ன கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்து இதே ரெஸ்டாரன்ட்ல பார்த்தாங்க என்று சொல்லுகிறார். என்ன விஷயமா அம்மா வந்தாங்க என்று கேட்க அப்போ உங்களுக்கு எதுவுமே தெரியாதா என்று கேட்கிறார். இல்ல ராதிகா எதுவுமே தெரியாது என்று சொல்ல உங்க கூட மறுபடியும் சேர்ந்து வாழ சொல்றாங்க என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார் நான் இதை எதிர்பார்க்கவே இல்லை என்று கோபி சொல்ல எனக்குமே அதிர்ச்சியா தான் இருந்தது ஆனா நான் உங்ககிட்ட என்னால முடியாதுன்னு சொல்லிட்டேன் என்று சொல்ல சாரி ராதிகா, நான் உங்களுக்காக உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். என்று சொல்ல சரி நீங்க அவங்கள பாத்துக்கோங்க நான் உங்ககிட்ட கம்பளைண்ட் பண்ணனும்னு சொல்லல அவங்க மேல எனக்கு ஒரு அக்கறை இருந்தது அதனாலதான் என்று சொல்ல ராதிகா சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

ஈஸ்வரி வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க கோபி கோபமாக வந்து எங்க போயிட்டு வந்தீங்க என்று கேட்க போன வெளிய போய்ட்டு வந்தது கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்களா என்று கேட்க கோவிலுக்கு தாண்டா போயிட்டு வந்தேன் எப்போ பார்த்தாலும் வீட்ல இருக்க முடியுமா என்று சொல்ல பொய் சொல்லாதீங்க நீங்க ராதிகாவா மீட் பண்ணி பேசுனது சொல்லிட்டா என்று சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். கோபி என்ன கேட்கிறார்?அதற்கு ஈஸ்வரியின் பதில் என்ன? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 17-06-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 17-06-25