ராதிகா சொன்ன வார்த்தை, அமைதியான ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ராதிகா சொன்ன வார்த்தையால் ஈஸ்வரி அமைதியாகியுள்ளார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 13-02-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 13-02-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவிடம் பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி பாக்யாவிடம் வந்து உன்னை யார் அவளை கூப்பிட சொன்னது கோபி இங்க இருக்கிறது புடிக்காம பண்ண ஏதாவது சதி வேலை பண்றியா என்றெல்லாம் கோபப்பட்டு பேச பாக்கியா நான் எந்த சதி வேலையும் பாக்கல என்னோட பையன் சந்தோஷத்துல எனக்கு தெரிஞ்சவங்க பங்கு எடுத்துக்கணும்னு நினைச்சேன் அவ்வளவுதான் என்று பேசிக்கொண்டிருக்க இதை கவனித ராதிகா ஈஸ்வரி இடம் நீங்க பயப்படாதீங்க உங்க பையன் கிட்ட நான் ஒன்னும் பேசல நல்லா இருக்கியான்னு ஜஸ்ட் விசாரிச்சா அவரும் விசாரிச்சாரு அவ்வளவுதான் பயப்படுற அளவுக்கு நான் ஒன்னும் பண்ண மாட்டேன் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் புரொடியூசர் இடம் கோபி பேசிக்கொண்டிருக்க எழிலை கூப்பிட்டு ப்ரொடியூசர் சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார் பிறகு கோபியிடம் எழில் பேசிக்கொண்டு இருக்க நீங்க நல்லா இருக்கீங்களா அப்பா வந்ததிலிருந்து உங்க முகமே சரியில்லை. நீங்க அவங்க கூட வாழ ஆசைப்படுகிறீர்களா? நான் பேசட்டுமா என்று கேட்க கோபி அதெல்லாம் வேணாம் உங்க வாழ்க்கையில தான் அம்மா அப்பா பாக்கணும் ஆனா எனக்கு நான் பார்த்துக்கிறேன் எதுவும் பேச வேண்டாம் என்று சொல்லுகிறார். பிறகு கோபி எழிலிடம் இந்த பீல்டு நீ சூஸ் பண்ணும் போது நான் உன்ன நெறைய திட்டி இருக்கேன் ஏன் அடிச்சு கூட இருக்க ஆனா அத நெனச்சு இப்ப எல்லாம் கஷ்டப்படுறேன் என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா என்று ஆறுதல் சொல்லுகிறார் எழில் பிறகு ஈஸ்வரி அங்கே வர என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க அம்மாவும் பையனும் என்ன பேசுவோமோ லதா அப்பாவும் பயணம் பேசுறோம் என்று கோபி சொல்லிவிட இனியா கோபியை கூப்பிடுகிறார்.

பிறகு ஈஸ்வரி எழிலிடம் நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு இல்ல என்று சொல்ல எனது பாட்டி என்று கேட்கிறார் நீ படம் முடிச்சு ரிலீஸ் ஆன உடனே நம்ம வீட்டுக்கு வந்து குழந்தை பெத்துக்கணும் என்று சொல்ல சரிங்க பாட்டி எல்லாமே படம் ரிலீஸ் ஆனதுக்கப்புறம் பாத்துக்கலாம் என்று சொல்லி நம்மளை விட்டு போட்டோ எடுக்குறாங்க வாங்க இப்ப எடுத்துக்கலாம் என்று அழைத்து செல்கிறார். பிறகு குடும்பத்தினர் அனைவரும் எடுத்துக்கொள்ள ராதிகா தனியாக போன் பேசிக்கொண்டு இருக்கும் போது இனியா நீங்களும் வாங்க போட்டோ எடுத்துக்கலாம் என கூப்பிடுகிறார் ஆனால் ராதிகா நான் போட்டோல இருந்தா நல்லா இருக்காது நீங்க எல்லாரும் நில்லுங்க நான் போட்டோ எடுக்குறேன் என்று சொல்லுகிறார்.

பிறகு இனியா பாய் பிரண்டுடன் காபி ஷாப்பில் பேசிக் கொண்டிருக்கிறார். ஆடியோ ரிலீஸ் இன் நடந்த போட்டோக்களை காட்டும்போது இன்னைக்கு நான் ராதிகா ஆன்ட்டி கூட நல்லா சந்தோஷமா பேசினேன் நாளைக்கு அவங்களோட பைனல் ஹியரிங் நாளைக்கு தெரிஞ்சிடும் என்று சொல்ல நீ யார் பக்கம் ஜெயிக்கணும்னு நினைக்கிறேன் என்று சொல்லுகிறார். எதுவா இருந்தாலும் அது அவங்க ரெண்டு பேரோட லைஃப் அவங்க முடிவு எடுக்கப் போறாங்க எந்த விதத்திலையோ என்ன எபெக்ட் பண்ணாது என்று சொல்லுகிறார். உடனே இனியா நீ எனக்கு கிடைத்தது எனக்கு ரொம்ப லக்கு என்ற சந்தோஷ பட நீயும்தான் என்று அவரும் சொல்லுகிறார். உடனே இருவரும் ஹெட்செட்டில் பாட்டு வைத்த இருவரும் கேட்டுக்கொள்கின்றனர்.

மறுபக்கம் ராதிகா பாக்கியா செல்வி மூவரும் ரெஸ்டாரன்ட் ஒன்றில் வந்து சாப்பிடுகின்றனர். ராதிகா உங்க ரெஸ்டாரண்டுக்கே போயிருக்கலாமே என்று கேட்க அங்க போனா நான் சாப்பிடவே முடியாது யாரவது வந்தால் எழுந்து எழுந்து போய் வேலை செய்ற மாதிரி ஆயிடும் என்று சொல்ல அதுவும் சரிதான் என்று ராதிகா சொல்லுகிறார். பிறகு ராதிகா என்ன கேட்கிறார்? அதற்கு பாக்யாவின் பதில் என்ன? செல்வி என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 13-02-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 13-02-25