பாக்கியலட்சுமி சீரியல் கல்யாண ட்ராக்குக்கு மாறியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் இன்றைய எபிசோடில் செழியன் தூங்காமல் டல்லாக இருக்க ஈஸ்வரி என்னாச்சு என்று கேட்க நைட் எல்லாம் சரியா தூங்கவே இல்லை, குழந்தை சரியா தூங்கவே இல்ல அதனால நானும் தூங்கல என்று கூறுகிறார்.
பிறகு பாக்யா குழந்தைக்கு வயிறு வலி சொர்க்கம் என்று சொல்ல ஈஸ்வரி தூக்கிட்டு வா நான் பார்க்கிறேன் என்று சொல்ல செழியன் இல்ல பாட்டி குழந்தை தூங்கிட்டு இருக்கா என்று சமாளிக்கிறார். ஜெனி எங்கே என்று கேட்க அவளும் நைட்டு எல்லாம் தூங்கல குழந்தையோடு தூங்கிட்டு இருக்கா என்று சொல்லி எழிலை வாக்கிங் கூப்பிட கேள்வி வொர்க் அவுட் பண்ணலாம். தூக்கமில்லாமல் வாக்கிங் போனா டி ஹைட்ரேஷன் ஆகி மயங்கி விடுவ என்று சொல்ல இருவரும் மொட்டை மாடிக்கு செல்கின்றனர்.
செழியன் அங்கேயும் டல்லாக இருக்க எழில் என்னாச்சு என்று கேட்க ஜெனி சந்தேகப்பட்டு பேசியது எல்லாம் சொல்கிறார். ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு திரும்பவும் உன்னை சேர்ந்து இருக்கீங்க அதனால கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் இருக்கும் போக போக சரியாகிவிடும் என்று எழில் சொல்ல செழியன் ஓரளவுக்கு நிம்மதி அடைகிறார்.
பிறகு பழனிச்சாமி அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கி புது ட்ரெஸ்ஸில் ரெடியாக காலிங் பெல் அடித்தது வெளியே வந்து பார்க்க அக்காவும் தங்கச்சியும் வந்து சர்ப்ரைஸ் கொடுக்கின்றனர். கூடவே அக்காவின் மகனும் வந்திருக்கிறார்.
இதை எடுத்து திரும்பவும் காலிங் பெல் அடிக்க வெளியே சென்று பாக்கியாவின் குடும்பத்தினர் வந்து நிற்கின்றனர். பழனிச்சாமி அவர்களை உள்ளே அழைத்துச் சென்று தன்னுடைய அக்கா தங்கைகளை அறிமுகம் செய்து வைக்கிறார். பிறகு அவர்களுக்கு பாக்கியாவையின் பாக்கியம் குடும்பத்தையும் அறிமுகம் செய்து வைக்கிறார்.
பழனிச்சாமி நம்ம எழுந்து ரூமுக்கு வர பின்னாடியே வரும் மகள்கள் அண்ணனுக்கு ஒரு பொண்ணு பார்த்து இருக்கேன்னு சொன்னியே யாரது என்று கேட்க பாக்கியா தான் என்று சொன்னதும் ஷாக் ஆகின்றனர். பழனிச்சாமியின் அக்கா இதற்கு சம்மதம் தெரிவிக்க தங்கச்சி அவங்களுக்கு கல்யாணம் ஆகி அவங்க பையனுக்கு குழந்தை இருக்கு என்று சொல்ல பாக்கியா ரொம்ப நல்ல பொண்ணு அவ தான் என் மருமக நான் முடிவு பண்ணிட்டேன் என பழனிச்சாமியின் அம்மா சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.