
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறிய ரித்திகா குறித்து கோபி பதிவு செய்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டிஆர்பியில் வெற்றி நடை போட்டு வரும் இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரித்திகா தமிழ்ச்செல்வி.
இவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் திடீரென இவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். இவருக்கு பதிலாக அக்க்ஷிதா நடிக்க உள்ள நிலையில் அவரது காட்சிகள் இன்னும் ஒளிபரப்பாகாமல் இருந்து வருகிறது.
இப்படியான நிலையில் ரித்திகா தமிழ்ச்செல்வியின் விலகல் குறித்து கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் மறைமுகமாக பதிவு செய்துள்ளார். அதாவது ரித்திகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்தி பதிவு செய்துள்ளார்.
இவருடைய இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.