
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக வெளியான அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பிற மொழியில் ஹிட் அடித்த இந்த சீரியல் விஜய் டிவியில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் டிவியின் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த சீரியலாக பாக்கியலட்சுமி இருந்து வருகிறது. இப்படியான நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக வெளியான அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
உண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் வேறு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள பாக்கியலட்சுமி சீரியல் வேறு. கன்னட மொழியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற பாக்கியலட்சுமி என்ற சீரியல் தான் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

ஒரே டைட்டிலில் இரண்டு சேனல்களில் இரு வித்தியாசமான சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.