பாக்யா சவாலில் ஜெயிக்க மூட்டை முடிச்சு கட்டிக்கொண்டு கிளம்பியுள்ளனர் கோபி மற்றும் ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா ஒரு மாதத்தில் 18 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து விடுகிறேன் பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பி விட வேண்டும் என கோபிக்கு சவால் விட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பாண்டிச்சேரி சென்று மூன்று நாள் கேட்டரிங் வேலை செய்து கிட்டத்தட்ட 8 லட்சம் ரூபாய் பணத்தை தயார் செய்துள்ளார்‌. இன்னும் பத்து லட்சம் ரூபாய் பணத்தை எப்படி புரட்டுவது என முயற்சித்துக் கொண்டிருக்க கோபி மற்றும் ராதிகா உங்களால் முடியாது என ஏளனமாக பேசி வருகின்றனர்.

பாக்கியா சொன்னபடி சவாலில் ஜெயித்துக் காட்ட கோபி மற்றும் ராதிகா கையில் பெட்டியை தூக்கி கொண்டு வீட்டை விட்டு கிளம்புவது போல போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.