பாக்யாவுக்கு பதிலாக மேடை ஏறி உள்ளார் ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூலுக்கு வந்த இனியாவை கோபி பாராட்டி சந்தோஷப்பட்ட நிலையில் எல்லோரும் பாக்கியவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்ததாக இனியாவை ஸ்டேஜுக்கு அழைக்க அவர் மேலே சென்று விடுகிறார். மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஓகே கொடுக்க இனியா மற்றும் குடும்பத்தினர் எல்லோரும் சந்தோஷம் அடைகின்றனர். எல்லோரும் இனியாவை பாராட்டி பேச கோபி ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். அதன் பிறகு இனியாவின் பெற்றோரை நாளைக்கு அழைக்க கோபி வா ராதிகா என்று ராதிகாவின் கையை பிடித்து கூப்பிட நான் எதுக்கு நீங்க போங்க என சொல்கிறார். கோபி நா மட்டும் தனியா போனா நல்லா இருக்காது நீயும் வா என சொல்லி அவரை அழைத்துச் செல்ல இனியா முகம் மாறுகிறது. இருந்தாலும் எதையும் வெளிக்காட்ட முடியாமல் இனியா அம்மாவை எதிர்பார்த்து தவிக்கிறார்.

அதன் பிறகு கோபி ராதிகா இனியாவுடன் சேர்ந்து போட்டோக்களை எடுத்துக் கொண்ட பிறகு இனியா அண்ணா மேல வாங்க என்று சொன்னது குடும்பத்தினர் எல்லோரும் மேலே சென்று ஃபோட்டோ எடுத்துக் கொள்கின்றனர். பிறகு இனியா அம்மா மட்டும் வராம போயிட்டாங்க என் மேல அவங்களுக்கு பாசமே இல்லை என கோபப்பட எழில் இனி வீட்டுக்கு போறதுக்குள்ள அம்மா அங்க இருப்பாங்க என சமாளித்து அனுப்பி வைக்கிறார்.

வீட்டுக்கு வந்ததும் எல்லோரும் அமிர்தாவிடம் நடந்த கதையை சொல்லிக் கொண்டிருக்க அப்போது பழனிச்சாமி கிப்ட்டுடன் வந்து இனியாவுக்கு வாழ்த்து சொல்கிறார். இனியா அம்மா மட்டும் வரல என சொல்லி வருத்தப்பட ராமமூர்த்தி நான் போய் பாத்துட்டு வந்துடுறேன் என சொல்லி கிளம்ப பழனிச்சாமி நான் கூட்டிட்டு போறேன் என்று சொல்லி அவரும் கிளம்பி செல்கிறார்.

இருவரும் பங்ஷன் நடக்கும் இடத்திற்கு வந்து இறங்குகின்றனர். பாக்கியா உட்பட சமைக்க வந்த எல்லோரையும் ஒரு இடத்தில் உட்கார வைத்திருப்பதை பார்த்து அங்கு சென்று நடந்த விஷயங்களை கேட்டு அதிர்ச்சியடைகிறார்கள். அந்த தம்பியும் பார்த்து பழனிச்சாமிக்கு அங்கு பழக்கமானவர் ஒருவர் இருக்க அவரை கூப்பிட்டு விசாரிக்க அவர் மாப்பிள்ளை வீட்டார் என தெரிய வருகிறது.

பிறகு பேசி பிரச்சினையை சரி செய்து விடலாம் மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசலாமா என்று சொல்ல அவங்க பயங்கர கோபத்தில் இருக்காங்க யார் என்ன சொன்னாலும் இந்த கல்யாணம் நடக்காது என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.