பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக வெளியான செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் சதீஷ்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பழனிச்சாமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ரஞ்சித் என்ட்ரி கொடுத்தார்.

இது குறித்து சதீஷ் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் ரஞ்சித் சார் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார். என்னுடைய காட்சிகள் குறையும் நான் போய் ரெஸ்ட் எடுக்க போகிறேன் என சதீஷ் தெரிவித்திருந்தார்.

அவர் பேசிய இந்த வீடியோவை வைத்து பலர் சக்தி இந்த சீரியலில் இருந்து விலக்குவதாக செய்தி பரவியது. இதையடுத்து தற்போது விளக்கம் அளித்துள்ள சதீஷ் நான் காட்சிகள் குறையும் என்று தான் சொன்னேன் விலகுகிறேன் என சொல்லவில்லை. ஆனால் தவறாக செய்தியை பரப்பி விட்டார்கள் என வருத்தப்பட்டுள்ளார்.

https://www.instagram.com/reel/CpeHxhtsE6p/?igshid=YmMyMTA2M2Y=