கணவருடன் ரொமான்ஸ் மூடில் ஓணம் கொண்டாடியுள்ளார் ரித்திகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தவர் ரித்திகா தமிழ்ச்செல்வி.

கடந்த தின தினங்களுக்கு முன்னர் இவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவே சீரியலில் இருந்து வெளியேறியதாகவும் தகவல் ஒன்று பரவி வருகிறது.

இப்படியான நிலையில் இவர் கணவருடன் சேர்ந்து ரொமான்ஸ் மூடில் முதல் வருட ஓணத்தை கொண்டாடியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.