மீண்டும் சன் டிவி சீரியலில் நடிக்க வந்துள்ளார் நேஹா. 

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் நேஹா. இவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் தற்போது மீண்டும் சன் டிவி சீரியலில் நடிக்க வந்துள்ளார். ஆமா‌ம், சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள லட்சுமி என்ற புதிய சீரியலில் தான் நடிக்க உள்ளார். ப்ரோமோ மூலமாக இது உறுதியாகி உள்ளது. 

அதாவது, சீரியல் ஹீரோயின் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதன் காரணமாக இவர் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

அதே நேரத்தில் புதிய சீரியலில் கமிட்டாகி உள்ள நேஹாவுக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.