இந்த ரணகளத்திலும் ஒரு குதூகலம் கேக்குது என பாக்கியலட்சுமி கோபியை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை தற்போது ராதிகாவின் கர்ப்பம் கலைய அந்த பழி ஈஸ்வரி மீது வந்து விழ கோபியும் அம்மாவை புரிந்து கொள்ளாமல் நோகடிக்கிறார். 

இப்படி எதிர்பாராத திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் வழக்கம்போல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். 

அதாவது சோகமாக வீட்டுக்குள் வரும் கோபி ராதிகாவுடன் நான் தனது கல்யாண போட்டோவை பார்த்து பயந்து புலம்புவது போல அந்த காட்சிகள் அமைந்துள்ளன. ராதிகா ஹாஸ்பிடல்ல கிடக்கும் போது இந்த அலப்பறை எல்லாம் தேவையா என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் உங்களுடைய இந்த கூத்தை ராதிகா மட்டும் பார்த்த உங்கள் சோலி முடிஞ்சது கோபி பார்த்து நடந்துக்கோங்க எனவும் கலாய்த்து வருகின்றனர். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.