ரஜினிகாந்த் சர்ச்சை குறித்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார் சதீஷ்.
நவரசத்தையும் காட்டும் நாயகனாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வரும் இவர் ஒவ்வொரு நாளும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு ஏதாவது ஒரு தகவலை கூறி வருகிறார்.
அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் உபி முதல்வர் காலில் விழுந்தது சர்ச்சையானது ஏன் என்பது குறித்து பேசி உள்ளார். ரஜினி சார் அவரது காலில் விழுந்தது அவருடைய விருப்பம் எனக் கூறியுள்ள கோபி ரசிகர்கள் அவரை ஒரு சூப்பர் ஸ்டார் ஆக கெத்தாக மிக உயர்வான இடத்தில் வைத்துள்ளனர்.ஸ
அவர் தன்னைவிட வயது குறைவானவர் காலில் விழுந்ததை ரசிகர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை அதனால் தான் இவ்வளவு சர்ச்சை என தெரிவித்துள்ளார். நீங்கள் சொல்வது சரிதான் என ரசிகர்கள் பலரும் கோபியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.