இனியா கொடுத்த அதிர்ச்சி ஒரு பக்கம் இருக்க செழியன் அதிரடி முடிவெடுத்துள்ளார்.

விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடு செழியன் ரூமுக்குள் வருத்தத்தோடு இருக்க என்னாச்சு என ஜெனி விசாரிக்க அப்பா இல்லாமல் இந்த வீட்டில் இருக்கவே புடிக்கல. ஆன்ட்டி வந்து இத பத்தி கேட்கும் போது எனக்கு எவ்வளவு வருத்தமா இருந்துச்சு தெரியுமா? எல்லாம் அம்மாவால வந்தது அவங்கள பார்த்தாலே எனக்கு எரிச்சலா வருது. இப்போ சுத்தமா அவங்கள பிடிக்கல என கூறுகிறார். பேசாம ஆன்ட்டி சொன்ன மாதிரி கொஞ்ச நாளைக்கு அவங்க வீட்ல போய் இருக்கலாமா என சொல்ல அதிர்ச்சியான ஜெனி என்ன பேசுகிற நீ? நடக்கிற எல்லா பிரச்சனையும் சரி செய்ய வேண்டிய இடத்துல நீதான் இருக்கிற இப்படி ஓடி ஒளிய பார்க்காத. ஒருவேளை நீயே இந்த வீட்டை விட்டு போகணும்னு நினைச்சாலும் நான் வரமாட்டேன் அதுக்கப்புறம் நீ முடிவு பண்ணுவதை பண்ணிக்கோ என ஜெனி அங்கிருந்து நகர்கிறாள்.

இனியா கொடுத்த அதிர்ச்சி.. செழியன் எடுத்த முடிவு, பாக்கியாவுக்கு காத்திருந்த அடுத்தடுத்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

அடுத்ததாக கோபி அம்மாவுக்கு போன் போட்டு பேச ஈஸ்வரி கோபி குறித்து நலம் விசாரிக்க அவர் காலையிலேயே சுற்றிக்கொண்டு இருக்கிறேன் என சொல்ல வருத்தப்படுகிறார். ஏதாவது ஹோட்டல்ல ரூம் எடுத்து சாப்பிட்டு நல்லா தூங்கு அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காத என சொல்ல இந்த நேரத்தில் இனியா வந்து போனை வாங்கி பேசுகிறார். உங்கள பாக்கணும் போல இருக்கு இப்பவே வாங்க என்ன சொல்ல நாளைக்கு ஸ்கூல்ல வந்து பார்க்கிறேன் என்று கூறுகிறார் கோபி.

அதன் பின்னர் மறுநாள் காலையில் இனியா ஸ்கூலுக்கு கிளம்பி தயாராகி கீழே வந்து பாக்யாவை கூப்பிடுமாறு சொல்கிறார். பாக்கியா என்ன என்று கேட்க இன்னைக்கு பீஸ் கட்டணும் லாஸ்ட் நாலு என சொல்ல கடைசி நாளில் இன்னைக்கு வந்து சொல்ற என கேட்க நான்தான் அஞ்சு நாளா ஸ்கூல் போகவில்லையே இன்னைக்கு தான் எனக்கும் தெரியும் என கூறுகிறாள். பாக்கியா சரி நான் இன்னைக்கு பணத்த கட்டிடுறேன் என கூறுகிறார். நீதானே கட்டணும் சவால் எல்லாம் விட்டியே என இது ஏன் நக்கல் அடிக்கிறார். ஈஸ்வரி செழியன் கோபி இருந்திருந்தால் இதெல்லாம் கண்ணுக்கு தெரியாம நடந்திருக்கும் என பாக்கியாவை காயப்படுத்துகிறார்.

இனியா கொடுத்த அதிர்ச்சி.. செழியன் எடுத்த முடிவு, பாக்கியாவுக்கு காத்திருந்த அடுத்தடுத்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

அடுத்ததாக பாக்கியா பணத்தை புரட்ட என்ன செய்வது என செல்வியிடம் சொல்லி யோசித்துக் கொண்டிருக்க அப்போது ராமமூர்த்தி இதுகுறித்து விசாரிக்க பிறகு பணத்தை நான் தருகிறேன் என்னோட பேங்குக்கு வாய் என சொல்ல ஈஸ்வரி எல்லாத்தையும் நீங்க பார்த்தா அப்புறம் அவ கிட்ட சவால் என்னவாகிறது? செஞ்சி பார்க்கட்டும் அப்பதான் அதோட கஷ்டம் தெரியும் என சொல்ல இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.