
அமிர்தா ஆள் மாற மாலினி பக்கம் சாய்ந்துள்ளார் செழியன்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிச்சனில் பாக்கியா, அமிர்தா, செல்வி ஆகியோர் ஜெனி வளைகாப்பு பங்ஷனுக்காக பலகாரம் செய்து கொண்டிருக்க ஜெனி ஈஸ்வரியிடம் நாளைக்கு அம்மா வீட்டுக்கு செல்வது நினைத்து வருத்தப்படுகிறார்.

ஈஸ்வரி எனக்கு வளைகாப்பு முடிஞ்சு ஊருக்கு போகும்போது உங்க தாத்தா என்ன விட்டு பிரிய மனசு இல்லாமல் எங்களுக்கு முன்னாடி ஏறி கார்ல உக்காந்துக்கிட்டாரு என்று கதை சொல்ல எல்லோரும் சிரிக்கின்றனர்.
அடுத்ததாக ஜெனி ரூமுக்கு வர செழியன் அவரிடம் ஏதாவது பேச வேண்டும் என ஆசைப்பட அந்த நேரம் பார்த்து அமிர்தா ஜெனியை கூப்பிட ஜெனி அமிர்தாவிடம் என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன் என்று வெளியே வந்து விடுகிறார். இதனால் செழியன் இவளுக்கு என் மேல லவ்வே இல்ல போல என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மாலினி போன் செய்து உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் நேர்ல பாக்கணும் போல இருக்கு எனக்காக வந்துட்டு போங்க என்று கேட்க முதலில் செழியன் சீமந்தம் இருக்கு அதற்கான வேலைகள் இருக்கு என்று சொல்லி தவிர்க்க முயற்சி செய்கிறார்.

ஆனால் மாலினி ப்ளீஸ் எனக்காக ஒரு பத்து நிமிஷம் என்று சொல்லி கேட்டுவிட்டு சரி உங்களோட விருப்பம் என்று போனை வைக்கும்போது செழியன் நான் வரேன் என்று சொல்லி வாக்கு கொடுக்கிறார். அதைத்தொடர்ந்து எல்லோரும் வெளியே உட்கார்ந்து கொண்டிருக்க அப்போது அமிர்தா ஸ்வீட் எடுத்து வந்து கொடுத்து டேஸ்ட் எப்படி இருக்கு என கேட்கிறார்.
தாத்தா ஈஸ்வரியுடனான காதல் கதையை சொல்லிக் கொண்டிருக்க செழியன் ஜெனியை கூப்பிட ஜெனி ரெண்டே நிமிஷம் இந்த லவ் ஸ்டோரி மட்டும் கேட்டுட்டு வந்துட்டேன் என ஓடி வந்து விடுகிறார். திரும்பவும் மாலினி நம்ம மீட் பண்ணலாமா என்று மெசேஜ் அனுப்ப ஜெனியால் வெக்ஸ் ஆன செழியன் மீட் பண்ணலாம் என்று சொல்லி கிளம்பி செல்கிறார்.

மாலினி செழியன் சந்தித்து பேசும் போது நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கல என்று கேள்வி கேட்க மாலினி நான் ஒருத்தனை உயிருக்கு உயிரா லவ் பண்ணேன், ஆனால் அவன் என்னுடைய பணத்துக்காக தான் என் கூட பழகிட்டு இருக்கானு எனக்கு தெரியவந்தது. பணம் கிடைக்காதுன்னு தெரிந்ததும் விட்டுட்டு போய்ட்டான் என்று கண்கலங்க செழியன் உங்களுக்காக நான் இருக்கேன் என்று ஆறுதல் சொல்ல மாலினி செழியன் கையைப் பிடித்துக் கொள்ள செழியனும் மாலினியின் கையைப் பிடித்து அறுதல் செய்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அமிர்தாவாக அக்ஷிதா மற்றும் மாலினியாக ரேமா ஆகியோர் காட்சிகள் இன்று முதல் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
