இனியாவை சமாதானம் செய்துள்ளார் பாக்கியா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் இனியா கோபமாக வீட்டுக்கு வர எல்லோரும் பின் தொடர்ந்து வருகின்றனர். ரூமுக்கு செல்லும் நான் யார்கிட்டயும் பேச மாட்டேன் கண்டிப்பா அம்மா கிட்ட பேச மாட்டேன் கதவை சாற்றிக் கொள்ள எல்லோரும் கதவைத் திற இனியா என தட்டுகின்றனர்.

பிறகு பாக்கியா மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டு அழ அம்மா அழறாங்க கதவைத் திற என எழில், செழியன் ஆகியோர் சொல்ல இனியா கதவை திறந்து கொண்டு கோபமாக சென்று ஒரு ஓரமாக நின்று கொள்ள பாக்கியா, ராமமூர்த்தி ஆகியோர் நடந்த விஷயங்களை சொல்லி இனியாவுக்கு புரிய வைக்க பிறகு எனக்கு கோபம் இல்லை எப்பவும் என் கூட இருந்துட்டு நான் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கி எல்லோரும் என்னை பாராட்டும் போது என் கூட நீ இல்ல என்ற வருத்தம் தான் என சொல்லி பாக்யாவை கட்டிப்பிடித்துக் கொள்கிறார்.

அதன் பிறகு பாக்கியா இனியவை நினைத்து பெருமைப்பட்டு வாழ்த்துகிறார். மறுபக்கம் வீட்டுக்கு வரும் கோபி ராதிகாவிடம் கமலா நடந்த விஷயங்களை கேட்க அப்போது ராதிகா என்கூட சண்டை போடுற ரெண்டு பேரும் அங்க வரல என்று கூறுகிறார். பாக்யா வராத செய்தி கேட்டு ஆச்சரியத்தோடு ஏன் வரல என கேட்க கோபி அவளுக்கு வேற முக்கியமான சோலி இருக்கு, கேட்டரிங் இது அது எல்லாமே சும்மாதான். அந்த லேம்ப் போஸ்ட் பழனிசாமி உடைய ஊர் சுத்தணும் அதுதான் வேலை.. அவளுக்கு என் பசங்க வேலையோ வயசான அப்பா அம்மா மேலையோ அக்கறை கிடையாது என ஆவேசப்பட்டு உள்ளே செல்கிறார்.

பிறகு ராதிகாவிடம் கேட்க அவர் அவங்க கூட ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் போறாரு அவ்வளவு தான் இவர் சொல்ற மாதிரி தான் இருக்க வாய்ப்பில்லை என கூறுகிறார். ராதிகாவின் அம்மா அப்படியெல்லாம் யாரையும் நம்ப முடியாது என்று சொல்ல யார் எப்படி போனால் நமக்கு என்ன என்று ராதிகா சொல்லி அவரும் எழுந்து சென்று விடுகிறார்.

மறுபக்கம் அமிர்தா மீண்டும் எழிலிடம் குழந்தை பற்றி பேச எழில் நமக்கு நல்லா இருக்கும்போது எதுக்கு இன்னொரு குழந்தை என்பதில் உறுதியாக இருக்க எனக்கு குழந்தை வேண்டும் என சொல்ல சரி ஒரு வருஷம் இப்போதைக்கு குழந்தையை பத்தி பேச வேண்டாம் அதுக்கப்புறம் உனக்கு குழந்தை பெத்துக்கணும் என்ற ஆசை இருந்தா பெத்துக்கலாம் என சொல்லி சமாதானம் செய்கிறார்.

அதனை தொடர்ந்து பாக்யாவுக்கு தொடர்ந்து முத்தம் கொடுத்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இன்னும் நிறைய படிக்கணும் என்ன படிக்கணும்னு ஆசைப்படுறியோ அதைப்படி என்று சொல்ல நான் மிஸ்டு கால் படிக்கட்டுமா மீடியா ஃபீல்டுல வேலை செய்யணும்னு ஆசையா இருக்கு என இனியா சொல்ல பாக்கியா தாராளமா படி நல்ல காலேஜா பார்த்து படி என்று சொல்ல இனியா சந்தோஷப்படுகிறார்.

நான் படிக்கணும்னு ஆசைப்பட்டேன் ஆனா என்னால படிக்க முடியல என்னுடைய ஆசையை உன் மேல திணிக்க மாட்டேன், ஆனா நான் போக நினைத்த இடத்தை விட நீ இன்னும் பெரிய இடத்துக்கு போகணும் அது மட்டும் தான் என்னுடைய ஆசை என சொல்கிறார். நம்ம கூட இருக்காங்க எப்ப வேணாலும் நம்ம விட்டு போயிடுவாங்க ஆனா நம்மளுடைய படிப்பும் வேலையும் எப்பவும் நம்மள விட்டுப் போகாது என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.