பழனிச்சாமி பாக்கியாவை காப்பாற்ற மேடையில் வைத்து அவமானப்படுத்தி உள்ளார் இனியா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியா மற்றும் அவரது டீமை சாப்பாடு சரியில்லை என நிச்சயதார்த்தம் நடந்த வீட்டில் பிடித்து உட்கார வைத்திருக்க அங்கு வந்த பழனிச்சாமி மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருகிறார். இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்கும் என மாப்பிள்ளை வீட்டாரை சம்மதிக்க வைத்து பாக்கியாவையும் காப்பாற்றுகிறார்.

மறுபக்கம் பாக்யாவின் வீடுகள் இருக்கும் இனியா ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்ததற்காக பாராட்டு விழா ஏற்பாடு செய்திருக்க கோபி ராதிகா மட்டுமில்லாமல் எழில் செழியன் அமிர்தா, ஜெனி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்‌. எல்லோரும் பாக்கியாவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க அவர் வராத காரணத்தினால் பங்க்ஷன் தொடங்கி நடக்கிறது.

மறுபக்கம் பாக்கியா பிரச்சினை தீர்ந்து இனியாவின் ரிசல்ட் என்ன என கேட்க ராமமூர்த்தி ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்திருக்க என்ன சொன்னது சந்தோஷத்தில் செல்வியை கட்டிப்பிடித்து உற்சாகமடைகிறார். பிறகு சாப்பாடு நல்லா இல்ல என்ற பேரோட நாம வெளியே போகக்கூடாது என்று சொல்லி சந்தோஷத்தில் பாயாசத்தை செய்து எல்லோருக்கும் கொடுத்து நல்ல பெயர் வாங்குகிறார்.

அதன் பிறகு இதுவரைக்கும் எனக்கு எங்கேயும் இப்படி தப்பு நடந்தது கிடையாது தெரியாம தப்பு நடந்துச்சு என மன்னிப்பு கேட்டு அங்கிருந்து விடைபெறுகிறார். மறுபக்கம் இனியா கோபி ராதிகாவை மேடைக்கு அழைத்து பாராட்டு விழா நடத்துகின்றனர்.

அடுத்ததாக பாக்கியா வேக வேகமாக ஓடிவந்து இனியாவை பார்க்க இனியா உனக்கு என்ன விட கேட்டரிங் தான் முக்கியம் என்று சொல்லப் போறேன் பேசாத என்கிட்ட என கோபத்தை காட்ட கோபி இதை பார்த்து சந்தோஷப்படுகிறார். உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளு டாடி இருக்கேன் என சொல்லி தன் பக்கம் இருக்க தூண்டில் போடுகிறார்.

இனியாவும் தேங்க்ஸ் டாடி நீங்களாவது வந்தீங்களே என பாக்யாவை அவமானப்படுத்தி அங்கிருந்து வெளியே கிளம்புகிறார். எல்லோரும் இனியாவை சமாதானம் செய்யும் முயற்சி செய்தும் யாரும் என்கிட்ட பேசாதீங்க எனக்கு கோபப்பட்டு வீட்டுக்குச் செல்ல பழனிச்சாமி பாப்பா நீங்க இல்லன்ற கோபத்தில் பேசுது வீட்டுக்கு போய் நாலு வார்த்தை பேசுங்க எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லி அனுப்ப எல்லோரும் வீட்டிற்கு கிளம்புகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.