பாக்கியா தான் பெஸ்ட் என குடிபோதையில் கோபி உளற ராதிகா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா பழனிச்சாமியுடன் வண்டியில் போனதாக கேள்விப்பட்ட கோபி டென்ஷன் ஆகிறார்.

காரில் வரும்போது எல்லாரும் நீ சந்தோஷமா இருக்கிறதா சொல்றாங்க, ஆனா உண்மையில் சந்தோஷமா இருக்கிறது பாக்கியா தான் எப்போ விட்டுட்டு போவானு காத்துகிட்டு இருந்தா மாதிரியே இருக்கு என புலம்பிக் கொண்டிருக்க பின்னாடி வந்த காரில் ஹாரன் அடிக்க போற இருங்கடா உங்க வாழ்க்கையில ராதிகா பாக்யா மாதிரி ஆளுங்க வந்தா உங்களுக்கு தெரியும் என புலம்பி கார் எடுக்கிறார்.

அடுத்து கோபி தன்னுடைய நண்பனுடன் சேர்ந்து ஒயின் ஷாப்பில் சரக்கு அடித்துக் கொண்டிருக்கிறார். போதும் போதும் என சொல்லியும் கேட்காமல் கோபி ஓவராக குடித்துவிட்டு பாக்கியா தான் பெஸ்ட் பாக்யா வீட்ல இருக்கும்போது நிம்மதியா இருந்தேன் ஆனா ராதிகாவோட சந்தோஷமாவே இல்ல, ஒரு ரொமான்ஸ் இல்ல மண்ணும் இல்லை. எப்ப பார்த்தாலும் எல்லாத்துக்கும் கத்திகிட்டே காளி மாதிரி கண்ணு உருட்டி உருட்டி பேசுறா, சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கோபப்படுற வீட்டுக்கு போகவே பயமா இருக்கு என புலம்புகிறார்.

பாக்கியாவை விட்டுட்டு போனதினால பீல் பண்றியா என அவருடைய நண்பன் கேட்க கோபி எனக்கு பாக்யாவை பிடிக்காது தான் அவ என்ன எதிர்த்து எந்த கேள்வியும் கேட்டதில்லை, ராதிகா விஷயம் தெரிந்த பிறகுதான் கேள்வி மேல் கேள்வி கேட்டா ஆனா அந்த கேள்வியில் நியாயம் இருந்தது. அவ கேட்ட கேள்விகளுக்கு என்கிட்ட பதில் இல்லை என புலம்புகிறார்.

அடுத்து ராதிகா மற்றும் ராமமூர்த்தி வீட்டில் இருக்க கோபி வந்து கதவை தட்ட ராமமூர்த்தி கதவை திறக்கிறார். கோபி டாடி என கட்டிப்பிடிக்க சரக்கு நாத்தம் பிடிக்காமல் ராமமூர்த்தி குடிச்சிட்டு வந்திருக்கியா என திட்டி ஷோபாவில் தள்ளி விடுகிறார். இந்த வயசுல இப்படி குடிச்சிட்டு குடிகாரனா வந்து நிக்கிற என திட்ட மனசு சரியில்லப்பா அதனாலதான் குடிச்சேன் என கோபி பேசுகிறார்.

பிறகு பாக்கியாவை எனக்கு பிடிக்காது தான் ஆனா அவ கூட இருந்தபோது சந்தோஷமாக இருந்தேன், ஆனா ராதிகாவோட இருக்கும்போது சந்தோஷமா இல்ல எப்ப பார்த்தாலும் கோபப்பட்டுக்கிட்டு இருக்கா கத்திகிட்டே இருக்கா நிம்மதியே இல்ல பாக்கியா தான் பெஸ்ட் நீ வேஸ்ட் என சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைகிறார். மேலும் டேபிளில் கேனில் தண்ணீர் இல்லாததால் இதுல எப்பயும் தண்ணி வைனு எவ்வளவு முறை சொல்லி இருக்கேன் நீ கேட்கவே மாட்டியா என ஜக்கை தூக்கி போட ராதிகா கண்ணீர் வடிக்கிறார்.

அடுத்து மறுநாள் காலையில் கோபி தலைவலியில் உட்கார்ந்து இருக்க அப்போது ராதிகா வர உடனே ராதிகாவிடம் ஹாய் பேபி நான் டெய்லி வாக்கிங் போவேன் என வெளியே கிளம்ப இப்போ இதுதான் முக்கியம் என ராதிகா சத்தம் போடுகிறார். மெதுவா பேசு அப்பா உடம்பு சரி இல்லாதவர், இப்படி கத்தி பேசாத என சொல்ல அங்கு வரும் ராமமூர்த்தி நைட்டு குடிச்சிட்டு வந்து எல்லாரையும் தூங்கவிடாமல் டார்ச்சர் பண்ண அப்ப தெரியலையா அப்பா உடம்பு சரியில்லாதவரு என திட்டுகிறார்.

அந்த வீட்ல இருக்கும்போது குடிக்காம தானே இருந்த இப்ப என்ன புதுசா என கோபப்பட்டு பேச கோபி ராதிகாவிடம் சென்று இனிமே குடிக்க மாட்டேன் என காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். ஆனால் ராதிகா அந்த பாக்கியா தான் பெஸ்ட்டா அப்போ அவகிட்டயே போக வேண்டியது தானே? ஏற்கனவே குடிகாரன் கிட்ட பட்டது போதாதா இப்போ நீங்களும் இப்படி குடிச்சிட்டு வந்தா நானும் மயூவும் இந்த வீட்ல இருக்க மாட்டோம், கிளம்பி போயிட்டே இருப்பேன் என சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு ராமமூர்த்தி அந்த வீட்ல இருக்கும் வரை குடிக்காமல் இருந்த இப்ப என்ன உனக்கு பிரச்சனை என திட்டி விட்டு வெளியே போக கோபி ராதிகாவிடம் சிக்கி தவிக்கிறார். அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் கோபி பாக்யாவை வழியில் தடுத்து நிறுத்தி அந்த பழனிச்சாமி கூட எல்லாம் பேசக்கூடாது என ஆர்டர் போட அதை சொல்ல நீங்க யாரு என பாக்கியா கேட்க உன்னை அப்படி எல்லாம் விட முடியாது என கோபி எச்சரிக்கிறார். பிறகு பாக்கியா சிட்டிகை போட்டு டோன்ட் ஃபாலோ மீ என இங்கிலீஷில் பேசி கோபிக்கு ஷாக் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.