ராதிகாவால் சிக்கல் காத்திருக்க கோபி புலம்ப கண்ணீர் விட்டு உள்ளார் ராமமூர்த்தி.

தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் ஒன்றிற்காக தேவையான பொருட்கள் லிஸ்ட் எழுதிக் கொண்டிருக்க அப்போது இனியா நாளைக்கு ரிசல்ட் என்ன சொல்ல ரிசல்ட் எப்போ வரும் எப்படி வரும் என கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து எழிலும் அங்கு வந்து அமர அவர் என்னமா எழுதிட்டு இருக்க என எட்டி பார்க்க பாக்யா பழனிச்சாமி ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் டெஸ்ட்டில் தன்னை பார்த்து காப்பியடித்த விஷயத்தை சொல்கிறார்.

இனியாவிடம் பயமா இல்லையா என்று கேட்க அதெல்லாம் இல்ல நான் கான்பிடன்ட்டா இருக்கேன் என சொல்கிறார். மேலும் பாக்கியா நாளைக்கு ஒரு சின்ன ஆர்டர் இருக்கு அதை முடிச்சுட்டு பத்து மணிக்குள்ள வந்து விடுவேன் என சொல்ல இனிமையாக ரிசல்ட் வரும்போது நீ என் கூட இருக்கணும் என்று கூறுகிறார்.

மறுபக்கம் கோபி தன்னுடைய நண்பர் செந்திலுடன் உக்காந்து சரக்கு அடித்துக் கொண்டிருக்கும் போது ராதிகா தன்னைவிட அதிக சம்பளம் வாங்கினால் மதிக்க கூட மாட்டா ஏறி மிதிப்பா என புலம்புகிறார். அது மட்டும் இல்லாமல் எக்ஸ்பென்ஸ் இன்னும் அதிகமாயிடும் சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம். பாக்யா ஓட வெளிய போனா அவ எல்லாத்தையும் சமச்சி எடுத்துக்கிட்டு வருவார் குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கி கொடுக்கிறதோடு செலவு முடிஞ்சு போயிடும்.

ஆனா ராதிகா கூட பீச்சுக்கு போனா அதுக்கு முன்னாடி படத்துக்கு போகணும் பின்னாடி ஹோட்டலுக்கு போனோம் என குறைந்தது அஞ்சு ஆயிரம் செலவாகும் இந்த மாதிரி மாதத்திற்கு இரண்டு தடவை போனா 12000 வரைக்கும் செலவாகிடும். அவ ஒரு பைசா கூட செலவு பண்ண மாட்டா மொத்தமும் நான் தான் செலவு பண்ணனும் என சொல்லி வருத்தப்படுகிறார்.

அதைத்தொடர்ந்து வீட்டில் ராமமூர்த்தி ஈஸ்வரி போன் எடுக்காத காரணத்தினால் வருத்தப்படுகிறார். அவர் வீட்ல இருந்தா கூட சரியா மாத்திரை போட மாட்டா ஒரு ஆள் பக்கத்துல இருந்து சொல்லிட்டே இருக்கணும் இப்போ எப்படி இருக்கா என்ன பண்றான்னு தெரியல கூட போய் இருக்க எல்லாருக்கும் போன் பண்ணிட்டு யாரும் எடுக்கலைன்னு சொல்லி கண் கலங்குகிறார்.

எல்லாரையும் விட்டுட்டு அவளுக்கு அவ்வளவு தூரம் போகணும்னு என்ன இருக்கு? அவ மனசுல அவ்வளவு கஷ்டம் இருக்கு அதான் போய் இருக்கா என்று கலங்குகிறார். அவ போன் பண்ணா எழுதுங்க நடுராத்திரியா இருந்தா கூட என்னை எழுப்புங்க என சொல்லி படுக்கப் போகிறார்.

குடிபோதையில் வீட்டுக்கு வரும் கோபி கதவைத் தட்ட ராதிகாவின் அம்மா கதவை திறக்க அவர் நான்தான் உங்க மாமியார் இது உங்க வீடுதான் நீங்க சரியா தான் வந்து இருக்கீங்க என்ன நக்கல் அடிக்க கோபி நான் ஸ்டெடியா தான் இருக்கேன். ஆமா நீங்க எப்ப ஊர்ல இருந்து வந்தீங்க என உலறுகிறார். ராதிகா தூங்கிட்ட விஷயம் தெரிந்து நான் ஹாலிலேயே படுத்துகிறேன் நீங்க ராதிகா கிட்ட எதுவும் சொல்லாதீங்க என்று கெஞ்சுகிறார்.

அடுத்து மறுநாள் காலையில் பாக்யா வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருக்க இனியா ரிசல்ட்க்காக தயாராகி கீழே வருகிறார். பாக்கியா 10 மணிக்குள் வந்து விடுவதாக சொல்லி சமைக்க கிளம்பி செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.