கோபி ஏத்தி விட இனியா கேட்ட கேள்வியால் பதிலடி கொடுத்துள்ளார் பாக்கியா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பழனிச்சாமி வீட்டுக்கு வந்து அவருடைய அம்மாவுக்கு கால் வலிக்காக ஒரு தைலம் வாங்கி வந்திருப்பதாக சொல்லி தேய்த்து விட அப்போது கோபிக்கு விவாகரத்து ஆகிடுச்சுல அப்படி இருக்கும்போது ஏன் பாக்கியா பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்காரு, திரும்பவும் சேர்ந்து வாழணும்னு நினைக்கிறாரா என்று கேட்க அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று பழனிச்சாமி சொல்கிறார்.

பாக்கியா மனசுல அப்படி ஒரு எண்ணம் இருக்கா என்று கேட்க எனக்கு தெரிந்து அப்படி இருக்கறதுக்கு வாய்ப்பில்லை, ஏன்னா அவங்க அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காங்க, திரும்பவும் எப்படி அந்த வாழ்க்கைக்குள்ள போவாங்க என்று சொல்கிறார். சரி நான் வேணும்னா பாக்கியா வீட்டுல பேசவா என்று கேட்க பழனிச்சாமி எதுக்கு என்று திருப்பி கேட்க கல்யாண விஷயமா என்று சொன்னதும் இவர் அதிர்ச்சி அடைகிறார்.

என் மனசுக்குள்ள அப்படி ஒரு எண்ணம் இல்ல பாக்கியா மேடம் மனசுலயும் இருக்காது. அவங்க வீட்ல எல்லாரும் என்ன அவங்க பையனா பார்க்கிறாங்க அப்படி இருக்கும்போது நீங்க ஏடாகூடமா இப்படி கேட்டு வச்சீங்கன்னா அவங்க முகத்துல நான் எப்படி முழிப்பேன், இந்த பேச்சை இப்படியே விட்டுடுங்க நாங்க நல்ல நண்பர்கள் அப்படியே இருந்துட்டு போறோம் என்று சொல்கிறார்.

அடுத்ததாக வீட்டில் ஈஸ்வரி கதை ஏதோ சொல்லிக் கொண்டிருக்க ராமமூர்த்தி நீ காசிக்கு போய் 150 கதையை தெரிஞ்சிக்கிட்டு வந்திருக்க என்று கலாய்த்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக இனியாவிடம் என்ன இனியா நான் சொல்றது சரிதானே என்று கேட்க போன் நோண்டிக்கொண்டிருந்த இனியா இது எதையும் கவனிக்காததால் ஈஸ்வரி நீ போன குடு என்று சொல்லி போனை புடுங்க இனியா கோபப்படுகிறார். உனக்கு எதுக்கு இவ்வளவு கோபம் வருது நீ சரியா மூச்சு பயிற்சி செய்யல, அதனாலதான் உனக்கு கோபம் வருது என்று சொல்லி பாய் எடுத்துட்டு வர சொல்லி இனியாவை உட்கார வைத்து மூச்சு பயிற்சி செய்ய சொல்லி படாத பாடு படுத்துகிறார்.

அடுத்து அமிர்தா கைத்தவறி கரண்டியை கீழே போட ஈஸ்வரி எல்லாத்தையும் மறந்து கோபப்பட ராமமூர்த்தி உங்க ஏதோ சாந்தி சொரூபி இருந்தது எங்க போச்சு என்று கலாய்க்க எல்லாம் ஒரே நாள்ல மாறிடுமா கொஞ்சம் கொஞ்சமா தான் மாறும் என்று பதில் சொல்கிறார். பிறகு ராமமூர்த்தி காபி கேட்க டீ காபி எல்லாம் குடிக்க கூடாது என்று சொல்லி ரூமில் இருந்து ஒரு பாட்டிலை எடுத்து வர சொல்லி அதை வைத்து கசாயம் போட்டு எடுத்து வர சொல்கிறார் ஈஸ்வரி.

ஜெனி இந்த மாதிரி இருக்கும்போது டாக்டர் கிட்ட கேக்காம எதுவும் குடிக்க கூடாது என்று நைசாக நழுவிக் கொள்ள மீதி எல்லோருக்கும் ஈஸ்வரி கசாயத்தை போட்டு குடிக்க வைக்க முடியாமல் குடித்து தெறித்து ஓடுகின்றனர். கடைசியாக ஈஸ்வரி கசாயத்தை குடித்து பார்த்து என்ன இவ்வளவு கசப்பா இருக்கு என்று புலம்புகிறார்.

பிறகு பாக்கியா வந்ததும் வீட்டில் நடந்த விஷயங்கள் எல்லாத்தையும் சொல்ல அத்தையை இப்படியே விடக்கூடாது, பழையபடி மாத்தணும் என்று முடிவு எடுக்கின்றனர். உடனே பாக்யா பாறை மீன் குழம்பு வச்சு அத்தையை கவுத்தர வேண்டியதுதான் என்று பிளான் போட்டு மீன் குழம்பு வைக்கும் வேலையை தொடங்குகிறார்.

கடைசியாக எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ரூமுக்கு வர இனியா காத்துக் கொண்டிருக்க நீ இன்னும் தூங்கலையா என்று கேட்க தூக்கம் வரல என சொல்கிறார். நைட்டும் லேட்டா தூங்குற காலையிலேயே சீக்கிரம் எழுந்துக்கற, உனக்கு கஷ்டமா இல்லையா எதுக்கு இவ்வளவு கஷ்டப்படணும் என்று நைசாக அக்கறையாக பேசுவது போல பேசி காலேஜ்க்கு வராம விட்டுடலாம் இல்ல என்று அடி போடுகிறார்.

எல்லாருக்கும் நிறைய கனவு இருக்கும், எல்லாருடைய கனவும் நிறைவேறிடுதா? நீ காலேஜ் வராம அந்த நேரத்தை எங்களோட செலவு செய்யலாம்ல என்று சொல்ல இதெல்லாம் நீயா பேசுற மாதிரி தெரியலையே உங்க அப்பா சொல்லிக் கொடுத்து பேசுறியா என்று கேட்க யார் சொன்னா என்ன சொல்ற விஷயம் கரெக்ட்தானே என்று இனியா கூற இதையெல்லாம் உங்க அப்பா யோசிச்சாரா நிறைவேறாத கனவு என்று ராதிகாவை கல்யாணம் பண்ணாம விட்டிருக்கலாம்ல, அவரால இந்த குடும்பத்துக்கு எவ்வளவு பிரச்சனை ஆனா என்னுடைய கனவால இந்த குடும்பத்துக்கு எந்த பிரச்சனையும் கிடையாது இனி வரவும் வராது. நீயே சொல்லு நான் காலேஜ் போவது சரியா தப்பா என்று கேள்வி கேட்க இனியா என்ன பதில் சொல்வது என யோசிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.