
பாக்கியாவை அவமானப்படுத்திய கோபிக்கு பழனிச்சாமி பல்பு கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் வந்த கோபியை பார்த்து பாக்கியா இங்கே எதற்கு வந்தீங்க என்ற கேள்வி கேட்க உன் தில்லாலங்கடி வேலையை பார்க்க வந்தேன், வீட்டில் அப்படியே கண்ணகி மாதிரி நல்லவ வேஷம் போடுற என அவமானப்படுத்த பழனிச்சாமி அண்ணா கோபி அண்ணா இப்படி எல்லாம் பேசாதீங்க என்று சொல்லி பாக்கியாவை கிளாசுக்குள் அனுப்பி வைக்கிறார்.

பிறகு கோபியை பிடித்து நீங்க இப்படி சண்டை போட்டீங்கன்னா அப்புறம் போலீச கூப்பிடுவாங்க போலீசாரிடம் பாக்கியா மேடம் நீங்க யாருன்னு தெரியாதுன்னு சொல்லிடுவாங்க அதுல ரெண்டு போலீசுக்கு நீங்க பேசுறது பிடிக்கலைன்னா உங்களை கூட்டிட்டு போய் விடிய விடிய வைத்து பாயிண்டு புடிச்சிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன் என்று பல்பு கொடுத்து கோபியை அனுப்பி வைக்கிறார்.
அடுத்ததாக பாக்கியா வாழும் போது தான் சந்தோஷமா வாழ விடவில்லை இப்பொழுது அவருக்கு எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை அப்படி இருக்கும்போதும் என்னை எதுக்கு இப்படி தொந்தரவு பண்ணிட்டு இருக்காரு இவர் இப்படி பண்ணும் போது தான் எனக்கு மேல மேல பறக்கணும்னு தோணுது என்று பேசுகிறார்.

மறுபக்கம் நேராக பழனிச்சாமி வீட்டுக்கு வரும் கோபி பழனிசாமி அம்மாவிடம் உங்க பையனை நீங்க கண்டிச்சிங்களா என்று கேட்க அவர் நான் எதுக்கு கண்டிக்கணும் அவங்க ரெண்டு பேரும் வயசுல பெரியவங்க என்ன பண்ணனும் பண்ண கூடாதுன்னு அவங்களுக்கே தெரியும் நான் கூட கையில வெண்ணைய வச்சுக்கிட்டு எதுக்கு அங்க இங்க அலையணும்னு நீங்க சொன்ன பிறகு புரிஞ்சுகிட்டேன். பாக்கியாவையே பழனிச்சாமிக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருக்கேன் என்று குண்டை தூக்கி போட கோபி அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு என் பிரச்சினையை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று கோபி அங்கிருந்து கிளம்பும்போது பழனிச்சாமி குறுக்கே வந்து நின்று ஷாக் கொடுக்கிறார். கோபியை கூட்டிச்சென்று சாப்பிடுங்கண்ணா என்று உட்கார வைத்து விதவிதமாக பரிமாற அவர் ஏன் உங்க வீட்ல சாப்பிடணும்? உன்னை பார்த்தாலே எனக்கு புடிக்கல என்று கோபப்பட்டு வெளியே வந்து அப்பாடி எவ்வளவு வெரைட்டி என்று புலம்பி விட்டு வெளியே செல்கிறார்.

அடுத்து காலேஜில் இனியா தனது தோழிகளுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அப்போது பாக்கியா காலேஜ் வந்து அவர்களுக்கு ஸ்னாக்ஸ் கொடுத்து பேசி கொண்டிருக்கிறார். எழில் வரலையா என்று கேட்க இல்ல அப்பா வராரு என்று இனியா சொல்ல கொஞ்ச நேரத்தில் கோபி வந்து நிற்கிறார். பிறகு இனியா கோபியுடன் கிளம்பிச் செல்ல காரில் அவர் பாக்யாவுக்கு எதுக்கு தேவையில்லாத வேலை கிடைக்கிற நேரத்துல எல்லாம் ஏதாவது ஒரு வேலையை தூக்கி போட்டுக்கிட்டா குடும்பத்தை எப்படி கவனிப்பா உன்னை எப்படி பார்த்துக்குவா என்று இனியாவை ஏத்தி விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
